Bigg Boss: பார்வதி, திவாகருக்கு தான் வக்கிர புத்தி.. பளார் விட்ட விஜய் சேதுபதி.. அடி தூள் ப்ரோமோ!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இன் 6வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி விசாரிக்க, விவாதிக்க பல சம்பவங்கள் நடைபெற்றது. அதில் பிக் பாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட மூன்றாவது ப்ரோமோவில், வி.ஜே. பார்வதி மற்றும் தர்பூசணி திவாகரை நோக்கி, நீங்கள் இருவரும் தான் வக்கிர புத்தி கொண்டவர்களாக இருக்குறீர்கள் என்று பளார் விட்டுள்ளார்.
13ஆம் தேதி எபிசோடில் கற்களை அடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது அரோரா சக போட்டியாளர்களுக்கு ஐடியா கொடுக்கும் விதமாக இரண்டு கற்களை கிடைமட்டமாகவும், அவற்றுக்கு நடுவே ஒரு கல்லை செங்குத்தாகவும் நிறுத்தி, இது போலவும் முயற்சி செய்யுங்கள் என்று கூறினார்.
இதைப் பார்த்ததும் நடுவராக இருந்த பார்வதி, "என்ன குறியீடு காட்டுகிறீர்கள் நீங்கள் ( அரோரா)? உங்கள் மனதில் இருப்பதை எல்லாம் இப்படித்தான் வெளிப்படுத்துவீர்களா? இப்படி கேவலமான எண்ணம் தான் உங்களுடையது" என்று பேசினார். இதற்கு 14ஆம் தேதி எபிசோடில் பார்வதியிடம் விளக்கம் கேட்டதற்கு, " என்னுடைய பார்வையில் அரோரா வைத்த கற்களைப் பார்க்கும்போது தவறான குறியீடாகத்தான் இருந்தது. இரண்டு செங்கற்களை கிடைமட்டமாக வைத்து, நடுவில் ஒரு செங்கல் வைத்திருந்தார்கள். அதற்கு அரோரா விளக்கம் கொடுக்கலாம். ஆனால் எனக்கு அது தவறாக தான் தெரிந்தது என்று கூறுகிறார். திவாகரோ அது ஆபாசக் குறியீடு என்று கூறினார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இவர்களது இந்த பேச்சு சக போட்டியாளர்களுக்கே மிகவும் அருவறுப்பான நிலையை ஏற்படுத்தியது. இது குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்புவாரா என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் விஜய் சேதுபதியோ, கேள்வி மட்டும் எழுப்பாமல், அரோரா கற்களை எப்படி அடுக்கி காட்டினாரோ அதேபோல் அடுக்கிக் காட்டி, அதில் என்ன ஆபாசம் இருக்கிறது? அதில் என்ன ஆபாசம் தெரிகிறது என்று பளார் பளார் என்று கேள்விகளை வீசியுள்ளார்.
ஆபாசம் - வக்கிரம்: டாஸ்க்கில் அனைவரும் அடித்து பிடித்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த இடத்தில் திவாகரைப் பார்த்து ஆபாசக் குறியீடு காட்டுவதுதான் அந்த பொண்ணுக்கு ( அரோரா) வேலையா? இதுக்கு பெயர்தான் வக்கிரம். உங்க மண்டைக்குள்ள பிரச்னை, உங்க பார்வையில் பிரச்னை. இதுல யாரை வக்கிரம் என்று கூறுகிறீர்கள். திவாகர் நமக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால், அவர்கள் சொல்லும் அனைத்திற்கும் சரி என்று சொன்னால் இதுதான் நிலைமை" என்று விஜய் சேதுபதி விளாசி விட்டுவிட்டார்.

ஃபயர்: திவாகர் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் பார்வதி அவமானம் தாங்க முடியாத முகத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டு இருக்கிறார். ரசிகர்கள் விஜய் சேதுபதியின் கேள்விகளுக்கு ஃபயர் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வாரத்தில் இரண்டு எவிக்ஷன் என்று கூறப்படுகிறது. இதில் கனி திரு மற்றும் திவாகர் என இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











