Justice for Vikkals Vikram Team.. அட பாவமே.. அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்.. கலாய் வீடியோ
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்துடன் 12வது வாரத்தில் உள்ளது. இன்னும், இரண்டோ மூன்றோ வாரங்கள் தான் இந்த சீசனில் மீதம் உள்ளது. இப்படி இருக்கும்போது இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து, வீட்டில் இருந்த 11 போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றனர். இதில் போட்டியாளர் விக்கல்ஸ் விக்ரமின் குடும்பத்தினரும் வந்து சென்றனர். விக்கல்ஸ் விக்ரம் குடும்பத்தில் இருந்து விக்கல்ஸின் மனைவி, அவரது அம்மா மற்றும் அப்பா ஆகியோர் வந்திருந்தனர். இதில் தனது விக்கல்ஸ் குழுவினர் குறித்து விக்ரம் விசாரிக்காதது குறித்து, அவரது குழுவினரே, கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்ததும் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்க்கில் விக்ரம் அழுது பேசினார். அப்போது நான் காமெடியனுங்க, என்னைப் போய் அழ வெச்சுட்டீங்களே. விக்கல்ஸ் என்பது நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பெயர், வெளியே என்னை நம்பி ஒரு டீம் இருக்குதுங்க என்று எல்லாம் பேசி அழுதார்.
விக்கல்ஸ் டீம்: இப்படி இருக்கையில் அவரது குடும்பத்தினர் வரும் போது, அவர்களுடன் அவரது விக்கல்ஸ் டீமில் இருந்து யாராவது வருவார்கள் என்று எல்லாம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் போது, விக்கல்ஸ் விக்ரமின் குடும்பத்தினர் வந்தபோது, தனது ஆட்டம் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். அதேபோல் தனது குடும்பத்தினர், உறவினர்கள் குறித்து எல்லாம் கேள்விகள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.

ட்ரோல் வீடியோ: ஆனால் ஒரு வார்த்தை கூட தனது விக்கல்ஸ் டீமைச் சேர்ந்தவர்கள் குறித்து கேட்கவே இல்லை. தனது மனைவிக்கு மாறி மாறி முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அதேபோல் தனது பெற்றோர்களிடமும் பேசினார். இப்படி இருக்கும்போது, தங்கள் பற்றி ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே என்று வருத்தப்பட்டது குறித்து, ட்ரோல் வீடியோவாக அவர்களே வீடியோ உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். இவர்களின் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் பொண்டாட்டியைப் பார்த்த சந்தோஷத்தில் மனுஷன் தனது விக்கல்ஸ் டீமையே மறந்துவிட்டாரே என்று விளையாட்டாக கேள்வி எழுப்பி வருகிறரார்கள்.


Click it and Unblock the Notifications











