Bigg Boss: மனைவியைப் பார்த்ததும் மயங்கி விழுந்த விக்கல்ஸ் விக்ரம்.. இதுதான் அழகுல மயங்கி விழுகிறதா?

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த வாரத்தில் ஃபேமிலி ரவுண்ட் சென்று கொண்டு உள்ளதால். இதனால் போட்டியாளர்களுக்கு இடையில் எந்த விதமான சண்டைகளும் இல்லாமல், ஒரே அன்பு வெள்ளத்தால் பிக்பாஸ் வீடு நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் விக்கல்ஸ் விக்ரம் வீட்டில் இருந்து அவரது அம்மா, அப்பா மற்றும் மனைவி என மூவரும் வந்திருந்தார்கள். இதில் தனது மனைவியை பார்த்ததும் விக்கல்ஸ் விக்ரம் மயங்கி விழுந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விக்கல்ஸ் விக்ரம், இந்த சீசனில் களமிறக்கப்பட்ட போட்டியாளர்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற போட்டியாளர். இவரும் இவரது விக்கல்ஸ் டீமும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பாசிடிவான விமர்சனங்களை எதிர் கொண்டவர். இப்படி இருக்கும்போது, அவரது பிக்பாஸ் ஆட்டம் என்பது ரசிகர்கள் மத்தியில் வெகுவான பாராட்டைப் பெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் 12 வது வாரத்தில் உள்ளது, இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது. இதில் இன்னும் ஒரு வாரத்திற்குத் தான் வீட்டுத் தல டாஸ்க் நடைபெறும். இப்படி இருக்கும் போது விக்கல்ஸ் விக்ரம் இதுவரை ஒரு முறை கூட வீட்டுத் தல டாஸ்க்கில் வெற்றி பெற்று, வீட்டுத் தலையாக உருவெடுக்க வில்லை.

Bigg Boss Tamil 9 Vikkals Vikram Funny Fall Down After Saw His Wife It s Remembers Vadivelu Comedy Scene

எமோஷனல் ஆட்டம்: ஆனாலும் அவரது ஆட்டம் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு காரணம், சக போட்டியாளர்கள் மத்தியில் இவர் காட்டும் அன்பும் அக்கறையும் தான். ஒருமுறை விக்கல்ஸ் என்பது நான் உருவாக்கிய அடையாளம். எனது அப்பா சினிமாவில் தோற்று இருக்கலாம், ஆனால் நான் சினிமாவில் வெற்றி பெற்றே தீருவேன் என்று எமோஷனலாக அவர் தெரிவித்தது எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

மயங்கிய விக்ரம்: இப்படி இருக்கும்போது, இன்றைய எபிசோடில் விக்கல்ஸ் விக்ரமின் குடும்பத்தினர் வந்திருந்தனர். குடும்பத்தினரைச் சந்திப்பதற்கான டாஸ்கை முடித்ததும் ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்து வெளியே வந்தார் விக்கல்ஸ் விக்ரம். அப்போது அவரை வரவேற்க காத்துக் கொண்டிருந்தார் அவரது மனைவி. அவரது மனைவியை பார்த்ததும் மயங்கி விழுந்தார். உடனே அவரை சபரி பிடித்துக்கொண்டார். உடனே சக போட்டியாளர்கள் கொஞ்சம் பயந்து விட்டனர். உடனே விக்கல்ஸ் விக்ரம் நான் எனது மனைவியின் அழகைப் பார்த்து மயங்கி விழுந்துவிட்டேன் என்று தெரிவித்தார். இதைக் கேட்டதும் சக போட்டியாளர்கள் உட்பட விக்ரமின் குடும்பத்தினர் அனைவரும் சிரித்துவிட்டனர்.

Bigg Boss Tamil 9 Vikkals Vikram Funny Fall Down After Saw His Wife It s Remembers Vadivelu Comedy Scene

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X