பாரு, கம்ருதீன் மிட் நைட்டில் பார்த்த வேலை.. பிக் பாஸே காண்டாகிட்டாரே.. பெரிய பனிஷ்மென்ட் வேற!

சென்னை: இளம் இன்ஃப்ளூயன்சர்களை பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனுக்கு உள்ளே விட்டால் ஏகப்பட்ட சர்ச்சை கன்டென்ட்டுகள் கிடைக்கும் என திட்டமிட்ட பிக் பாஸ் டீமுக்கு கள்ளக் காதல், கசமுசா காதல் கன்டென்ட்டுகள் தான் அதிகம் கிடைத்துள்ளது.

உங்களால என்ன பண்ண முடியுமோ அதை நல்லாவே பண்ணிட்டீங்க என அடிக்கடி விஜய் சேதுபதியும், பிக் பாஸும் தான் கடுப்பாகி வருகின்றனர். இதுவரை எந்தவொரு சீசனிலும் இந்த அளவுக்கு மோசமான போட்டியாளர்களை பார்த்தது கிடையாது என பாரு மற்றும் கம்ருதீன் பார்த்த வேலைக்கு ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் தண்டனை கொடுத்துவிட்டார் பிக் பாஸ்.

Bigg Boss Tamil 9 Vj Parvathy and Kamarudin worst behaviour leads punishment to all
Photo Credit:

பாதி கிணறை பிக் பாஸ் நிகழ்ச்சி தாண்டி ஓடினாலும், பெரிதாக பொதுமக்கள் குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு ரொம்பவே வொர்ஸ்ட்டாக ஷோ மாறிவிட்டது என விமர்சகர்கள் உள்ளிட்ட பலர் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அப்படியே காவிய காதல்: கம்ருதீன், விஜே பார்வதி பிக் பாஸ் வீட்டில் பண்ணிக் கொண்டிருப்பது காவிய காதல் இல்லை கருமம் என பலூன் அக்கா அரோரா சின்க்ளேரே அழுது புலம்பிய காட்சிகளும் அவரை சமாதானப்படுத்துகிறேன் என எஃப்ஜே அட்வான்டேஜ் எடுத்துக் கொண்ட காட்சிகளும் சமீபத்தில் ரசிகர்களை கடுப்பாக்கிய நிலையில், தற்போது பாரு மற்றும் கம்ருதீன் பார்த்த வேலை காரணமாக பிக் பாஸே கடுப்பாகி விட்டார்.

கடுப்பான பிக் பாஸ்: அரோரா கன்ஃபெஷன் ரூமில் கதறி அழும் போது நீங்க பண்ணது தப்பு அதுதான் கில்டியா ஃபீல் பண்றீங்க என ஒரே போடாக போட்ட பிக் பாஸையே பாரு மற்றும் கம்ருதீன் கடுப்பாக்கி விட்டனர். பல முறை சொல்லியும் மைக்கை கழட்டி வைத்து விட்டு பேசுவது, மிட் நைட்டில் தனியாக ஸ்மோக்கிங் ரூம் செல்வது என எல்லை மீறிய நிலையில், பெரிய தண்டனையையும் பிக் பாஸ் கொடுத்துவிட்டார்.

மொத்த வீட்டுக்கும் தண்டனை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மொத்த போட்டியாளர்களுக்கும் சேர்த்தே தண்டனை கொடுத்துள்ளார். விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் பார்த்த வேலைக்கு காண்டான பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களுக்கும் பால், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்காத வகையில், அதையெல்லாம் ஸ்டோர் ரூமில் கொண்டு சென்று வைக்க சொல்லிவிட்டார். இந்த வாரம் விஜய் சேதுபதி வந்து என்ன பாடுபடப்போகிறாரோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X