Bigg Boss: நீச்சல் குளத்தில் விதிகளை மீறிய பாருவும் கமரூதினும்.. கண்டுபிடித்த பிக்பாஸ்.. ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9, இந்த வாரத்துடன் 11 வாரங்களை நிறைவு செய்கிறது. 12 வது வாரமான அடுத்த வாரத்தில் ஃபேமிலி ரவுண்ட் வாரம் நடைபெறவுள்ளதால் போட்டியாளர்களை போல ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த வாரத்தில் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்படி இருக்கும்போது, கடந்த வாரத்தில் பார்வதியும் கமருதீனும் மைக்கை கழட்டி வைத்தும், மைக்கை மறைத்தும் பேசினார்கள். இதற்காக விஜய் சேதுபதியிடம் கடுமையான எச்சரிக்கைகளையும் திட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.
பார்வதி - கமருதீன், இந்த சீசனின் காதல் புறாக்கள். ஒவ்வொரு சீசனும் அதுபோல காதல் புறாக்களை எதிர்கொண்டுள்ளது. வெளியே வந்தும் இவர்கள் அதே காதல் உறவில் இருப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் போது, ' பிங்கிளிக்கா பிலாப்பி' என்று சொல்லாமல் சொல்லி விடுகிறார்கள். இதனால் பார்வதி மற்றும் கமருதீனையும் ரசிகர்கள் அந்த வரிசையில்தான் வைத்துள்ளார்கள். ஆனாலும் இருவரும் இந்த வாரத்தில் பேசிக் கொண்ட ஒரு விஷயம் பலருக்கும் ஷாக்.
அதாவது இருவரும் வெளியே வந்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சொன்னது பெரும் கவனத்தை ஈர்த்தது. அதேபோல் நடு இரவில் நாய் குரைத்தது இவர்கள் இருவரால் தான் என்றும் ரசிகர்கள் தரப்பில் பேசு பொருளாக உள்ளது. கடந்த வாரத்தில் இருவரும் மைக்கை மறைத்து வைத்து பேசியது, தொடங்கி இவர்கள் இருவரும் காதல் மயக்கத்தில் செய்த சேட்டைகளால் சக போட்டியாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். விஜய் சேதுபதி கடுமையாக திட்டித் தீர்த்த பின்னர், இருவரும் வரும் வாரங்களில் கவனமாக இருப்பதாக தெரிவித்தார்கள்.

நீச்சல் குளம்: ஆனால் இந்த வாரத்தில் பெரிய சம்பவத்தில் மாட்டி உள்ளார்கள். அதாவது இருவரும் ஒன்றாக நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது இருவரும் மைக்கை கழட்டி வைத்து குளித்துக் கொண்டு இருந்தார்கள். இது மட்டும் இல்லாமல், இருவரும் மைக் இல்லாமல் குளத்திற்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள். இதைப் பார்த்த பிக்பாஸ் இருவரையும் மைக்கை மாட்டச் சொல்லி அறிவுருத்தினார்.
விதிமீறல்: இதனால் ஷாக் ஆன சக போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கமருதீனிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி கடிந்து கொண்டார்கள். கடந்த வாரத்திலும் மைக் இல்லாமல் பேசிய விவகாரத்தில் ஈடுபட்ட இவர்கள் இருவரும் மீண்டும் அதே விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் வீட்டிற்குள் இருக்க தகுதியற்றவர்கள் என்று விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











