Bigg Boss: திருந்தாத VJ பாரு.. விஜய் சேதுபதி முகத்துக்கு நேராக சொல்ல தைரியம் இல்லை.. ரசிகர்கள் தான் பாவம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 குறித்தும் அதன் ரசிகர்கள் குறித்தும் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களுடன் ஒப்பிடும்போது இந்த சீசன் ஒரு அர்த்தமற்ற சீசனாக போய்விடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. காரணம், ஒவ்வொரு சீசனும் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு வாழ்வியல் அனுபவத்தை ஏற்படுத்தி செல்லும். அதற்கான அறிகுறிகள் என்பது அந்தந்த சீசன் தொடங்கி சில வாரங்களுக்குள் தெரிந்துவிடும். ஆனால் இந்த சீசனைப் பொறுத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ரசிகர்கள் ஆறுதல் சொல்லும் நிலை ஏற்பட்டுவிடும் போல.
கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது, எப்படியும் இந்த போட்டியாளர்களில் இருந்து யாரோ ஐந்து பேர், இறுதிச் சுற்றுக்கு வரப்போகிறார்கள். அது ஆட்டத்தின் போக்கு அப்படி, ஆனால் ரசிகர்கள் மனதில் நம்பிக்கையை பெற்று, இந்த போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட் ஆனால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய போட்டியாளர்கள் என்று இதுவரை யாரும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

சரி, VJ பார்வதி விஷயத்திற்கு வருவோம், VJ பார்வதியின் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் அவர் தன் முன் வைக்கப்படுகிற அனைத்து வாதங்களையும் ஏற்க மறுக்கிறார். அது மட்டும் இல்லாமல், கத்திக் கொண்டே இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் விதிகளை ஏற்க மறுப்பதும் அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. இப்படி இருக்கும்போது வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்று எல்லா போட்டியாளர்களும் எப்படி ஆடிக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது என்று தங்களது ஸ்டைலில் சொன்னார்கள்.
விஜய் சேதுபதியிடம் சைலண்ட்: இதைத்தான் வாரா வாரம் விஜய் சேதுபதியும் சொல்லிக் கொண்டு வருகிறார். விஜய் சேதுபதி வாராவாரம் பார்வதிக்கு என்ன சொல்கிறாரோ, ரசிகர்கள் என்ன புலம்புகிறார்களோ அதைத்தான் வைல்ட் கார்டு போட்டியாளர்களும் உள்ளே சென்று சொல்லி உள்ளார்கள். வைல்ட் கார்டு போட்டியாளர்களிடம் நீங்கள் நான் எப்படி விளையாட வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள். அதை நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லுகிறார் பார்வதி. அப்படியானால் இதே பேச்சை, விஜய் சேதுபதியிடமே சொல்ல வேண்டியதுதானே, இந்த நாலுபேரும் சொல்வதைக் கடந்து வேறு எதுவும் விஜய் சேதுபதி மாற்றாக சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் விஜய் சேதுபதி கொஞ்சம் காட்டமாகவே சொல்லி இருக்கிறார். அதுவும் இந்த வாரத்தில் சனிக்கிழமை எபிசோடில் ரொம்பவும் காட்டமாக பேசியிருந்தார்.

தகுதி தராதரம் பார்க்கிறாரா?: அப்போது விஜய் சேதுபதியிடம் அமைதியாக பவ்யமாக நின்று கொண்ட பார்வதி, வைல்ட் கார்டு போட்டியாளர்களை நோக்கி, ஊருக்குள் நாலு பேர் நாலுவிதமா பேசுவார்களே அது நீங்கள் தான் என்றும், நான் எப்படி விளையாட வேண்டும் என்று நீங்கள் எனக்குச் சொல்லாதீர்கள் என்றும் கூறுகிறார். விஜய் சேதுபதியிடம் அப்படி பேசாத பார்வதி வைல்ட் கார்டு போட்டியாளர்களிடம் இந்த தொனியில் பேசுகிறார் என்றால், தன்னை விமர்சிக்கிற நபருக்கு தான் மதிப்பு, விமர்சனத்திற்கு கிடையாது என்பதாகத்தானே அர்த்தப்படுகிறது. அதாவது தர்பூசணி திவாகர் தன்னை விமர்சிப்பவர்களை நோக்கி தகுதி, தராதரம் என்று வாய் திறந்து கத்துகிறாரோ அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் பார்வதி வைல்ட் கார்டு போட்டியாளர்களை விமர்சிக்கிறார் என்பது தெளிவாகிறது. விஜய் சேதுபதி இதை கேள்வி எழுப்புவாரா என்று காத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











