பிக்பாஸ் வீட்டில் ஒரே பெட்.. ஒரே போர்வைக்குள் கமருதீனுடன் பார்வதி.. மிட்நைட்டில் நடந்த சம்பவம்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ்க்கு நிம்மதி காத்திருக்கிறது என்றே சொல்லலாம். டக்குனு முடிச்சுட்டு கப்பை கொடுத்து அனுப்பினால் போதும் என்ற மனநிலையில் பிக்பாஸ் இருக்கிறார் என்று எல்லாம் ஏற்கனவே ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி இருக்கும்போது, இந்த சீசனின் சர்ச்சை நாயகி பார்வதியின் நடவடிக்கைகள் தொடர்ந்து ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது. அந்த வகையில் அவரது மற்றொரு நடவடிக்கை பலரது விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.
எல்லா சீசன்களிலும் லவ் கன்டென்ட் கொடுக்கிறேன் என்று எப்படியும் இரண்டு பேர் இணைந்து கொண்டு ஆட்டத்தை நகர்த்திக் கொண்டு சென்று கொண்டு இருப்பார்கள். அதேபோல், யாராவது எப்போதும் சர்ச்சைக்குரிய செயல்கள், பேச்சுகளால் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருப்பார்கள். ஆனால் இந்த இரண்டையும் இந்த சீசனில் ஒரே நபராக கையாண்டு வருகிறார் பார்வதி.

அவர் ஆட்டம் தொடங்கிய தினத்தில் இருந்தே, சக போட்டியாளர்களுடன் நின்றால் சண்டை, உட்கார்ந்தால் சண்டை, நடந்தால் சண்டை, பார்த்தால் சண்டை என உப்பு சப்பு இல்லாத காரணத்திற்கு எல்லாம் சண்டை இழுத்து, மொத்த வீடும் தன்னைப் பற்றி மட்டுமே பேசும் அளவுக்கு நடந்து கொண்டார். இவர் தான் இப்படி ஆடுகிறார் என்றால் மற்ற போட்டியாளர்களோ, டாஸ்க்கை தவிர வேறு எதுவும் செய்யாமல், கிட்டத்தட்ட மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். பல நேரங்களில் விதிகளை மீறியது, பிக்பாஸை மதிக்காதது என இந்த சீசன் போட்டியாளர்கள் இந்த மொத்த சீசனையும் சிதைத்து விட்டார்கள்.
தனி அறை: அனைவரும் ஓரளவுக்கு நல்ல கன்டென்ட் கொடுத்து இருந்தாலும், அதிகமாக சண்டை மட்டும் போட்டுக் கொண்டு இருந்தனர். இதில் பார்வதி சொல்லவே வேண்டாம். ஏற்கனவே பார்வதி மீது பல குற்றச்சாட்டுகளுக்கு விடை தெரியாமல் உள்ளது. இந்நிலையில் தனது காதலன் கமருதீன், இந்த வாரத்தில் வீட்டுத் தல-யாக உள்ளார். அவருக்கு என்று தனி அறை உள்ளது. இப்படி இருக்கும்போது, கமருதீனுக்கு என்று உள்ள தனி அறையில் அவர் படுத்துக் கொண்டு இருக்கிறார். அங்கு சென்ற பார்வதி, கமருதீனுடன் படுத்து தூங்க நினைத்துள்ளார் போல தெரிகிறது.
ஒரே போர்வைக்குள்: கமருதீன் ஒரு ஓரத்தில் படுத்து இருந்தால், பார்வதி மற்றொரு ஓரத்தில் படுத்து இருந்தார். ஆனால் இருவரும் ஒரே போர்வைடை போர்த்தி இருந்தார்கள். உடனே கமருதீனோ, இங்கு நீ படுக்க வேண்டாம். நீ இங்கு தூங்கினால் விதிகளை மீறியதாக ஆகிவிடும். இங்கு படுத்தால் பேட் பர்ஃபாமன்ஸிலும் உன்னைச் சொல்லி விடுவார்கள், அதனால் நீ இங்கு படுத்து தூங்க வேண்டும் என்று சொல்கிறார். அதன் பின்னர் பார்வதி அங்கிருந்து வெளியேறுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பார்வதியின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதே நேரத்தில் கமருதீன் சொன்னதும், பிக்பாஸ் விதிகளை மீற கூடாது என்பதை புரிந்து கொண்ட பார்வதி, அங்கிருந்து வெளியேறி உள்ளார் என்றும் பேசி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











