மக்கள் அதுக்கு விழுந்துடுவாங்க.. அரோரா குறித்து VJ பார்வதியின் அருவறுக்கத்தக்க பேச்சு!

சென்னை: வழக்கமாகவே ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் 100+ நாட்களில் அவ்வப்போது சில சர்ச்சைகள் நடைபெறும். அது குறித்து விவாதம் வீக் எண்டில் பிக்பாஸிலேயே நடைபெறும். மேலும் இணையதளத்தில் இது குறித்து விவாதமும் நடைபெறும். இப்படி இருக்கும்போது, இந்த சீசனில் வி.ஜே. பார்வதி பேசும் பல விஷயங்கள், தேவையில்லாமல் கிளப்பும் பிரச்னைகள் போன்றவற்றைப் பார்க்கும்போது, நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கே முகம் சுழிக்க வைக்கிறது.

அதில் இந்த வாரத்தில் வி.ஜே. பார்வதி பல கேஸ்களை வாங்கி உள்ளார். அதில் ஒன்று ஆபாச குறியீடு பிரச்னை. அது அரோராவை மிகவும் மோசமான சித்தரிப்பதாக தான் இருந்தது. இதற்கு விஜய் சேதுபதி சனிக்கிழமை எபிசோடில் போட்டு கிழி கிழி என கிழித்தெடுத்துள்ளார். இன்னும் கொஞ்சம் நச் என்று சொல்ல வேண்டும் என்றால், ஊறப்போட்டு அடித்துள்ளார் என்று சொல்லலாம்.

Bigg Boss Tamil 9 VJ Parvathy Worst Comment About Aurora and Bigg Boss Fans

அதுக்கு விழுந்துடுவாங்க: இப்படி இருக்கும்போது, சான்ட்ராவுடன் வி.ஜே. பார்வதி பேசிக் கொண்டிருக்கும் போது, சான்ட்ரா, " அரோரா மிகவும் அழகாக இருக்கிறார். அதுவும் மேக்-அப் எல்லாம் போட்டு விட்டால் மிகவும் அழகாக இருக்கிறார் என்று கூறுகிறார். அதற்கு உடனே பார்வதியோ நம்ம மக்கள் தோலுக்கு விழுந்து விடுவார்கள் என்று கூறுகிறார். இது என்ன மாதிரியான சிந்தனை என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் கடந்த சீசன்களில் எல்லாம் ஆண், பெண் என மாறி மாறி தான் டைட்டிலை வென்றுள்ளார்கள். டைட்டிலை வெல்ல புறத்தோற்றம் மட்டும் காரணம் என்று பார்வதி நம்புகிறாரோ என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. டைட்டிலை வெல்ல, புறத்தோற்றத்தை கடந்து மக்கள் மனதை வெல்ல வேண்டும்.

என்ன காரணம்: ஆபாச குறியீடு பிரச்னையில் தொடங்கி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் அரோராவை மிகவும் மோசமாக சித்தரித்து வருகிறார் பார்வதி. அதாவது, ஆபாச குறியீடு பிரச்னை, கமருதீனை கைக்குள் போட்டு வைத்துள்ளார் என்று தர்பூசணி திவாகரிடம் கூறியது என இதை வரிசைப்படுத்தலாம். வி.ஜே. பார்வதி எதன் காரணமாக இவ்வாறு அரோராவை தொடர்ந்து மோசமாக சித்தரித்து வருகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. சில ரசிகர்கள் இதற்கு காரணம் அரோரா கம்ருதீனுடன் பேச ஆரம்பித்த பின்னர், பார்வதியுடன் பேசுவதில்லை. அதனால் தான் பார்வதி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள். இது எல்லாம் எங்கு சென்று முடியுமோ என்று புலம்பும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

Bigg Boss Tamil 9 VJ Parvathy Worst Comment About Aurora and Bigg Boss Fans

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X