VJ பார்வதி அந்த போடு போடக் காரணமே VJ பிரியங்கா தான்?.. சேதுபதி சார் கொஞ்சம் ரீவைண்ட் செஞ்சு பாருங்க

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் கடந்த வாரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தாலும் வீக் எண்டில் விஜய் சேதுபதி செய்த செயல் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதாவது VJ பார்வதி மற்றும் கமருதீனுக்கு அவர் ரெட் கார்டு கொடுத்தது 100 சதவீதம் சரி என்று பெரும்பான்மையான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், VJ பார்வதிக்கும் கமருதீனுக்கும் ஆதரவான குரல்களும் ஆங்காங்கே கேட்கத்தான் செய்கிறது.

இந்த மொத்த சீசனையும் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் தான் VJ பார்வதிக்கும் கமருதீனுக்கும் இப்படியான தைரியம் எங்கிருந்து வந்தது என்று கொஞ்சம் உணர முடியும். அதேபோல் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்த பின்னர் விஜய் சேதுபதி மற்ற போட்டியாளர்களை நோக்கி, பார்வதிக்கும் கமருதீனுக்கும் எதிரான உங்கள் குரல் என்பது அந்த அளவுக்கு வலுவானதாக இல்லையே என்று கேள்வி எழுப்பினார். ஆனால் சான்ட்ராவை காரில் இருந்து எட்டி உதைத்து தள்ளி விடும் போது, மற்ற 6 போட்டியாளர்களும் பார்வதி மற்றும் கமருதீன் செய்வது தவறு என்று சொன்னது மட்டும் இல்லாமல், தடுக்கவும் செய்தார்கள்.

ஆனால் ஒரு குறுகிய இடத்தில் இருந்து கொண்டு பார்வதி மற்றும் கமருதீன் செய்த செயலை உடல் வலிமை கொண்டு தடுப்பது என்பதும் சாத்தியமில்லாதது. அதே நேரத்தில் போட்டியாளர்கள் தங்களால் முடிந்ததை முயற்சி செய்தார்கள்.

Bigg Boss Tamil 9 VJ Priyanka Statement One Of The Reason For VJ Parvathy Ruthless Behaviour
Photo Credit:

பிரச்னை பார்வதி: சரி, இது ஒரு புறம் இருக்கட்டும், இந்த சீசன் முழுவதும் அதிக பிரச்னைகளை உருவாக்கியவர் என்றால் அது, பார்வதி தான். அப்படியான பார்வதியை சக போட்டியாளர்கள் கேள்வி எழுப்பாமல் இல்லை. போட்டியாளர்கள் தங்கள் ஆட்டத்தின் மீதே சந்தேகத்தை எழுப்பிய காரணங்களில் மிகவும் முக்கியமானது, VJ பிரியங்கா இந்த சீசனில் கெஸ்ட்டாக உள்ளே சென்ற போது, போட்டியாளர்களிடம் தெரிவித்த ஒரு விஷயம். அது, " பார்வதி என்னதான் பிரச்னைகளைச் செய்து கொண்டே இருந்தாலும், அவள் தான் இந்த ஷோவை நடத்துகிறாள்" என்று குறிப்பிட்டார்.

உளவியல்: VJ பிரியங்கா இவ்வாறு தெரிவித்தது, பார்வதிக்கு தெரிந்ததோ, தெரியவில்லையோ, மற்ற போட்டியாளர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அவர்கள் ஆட்டத்தின் மீது சந்தேகத்தை எழுப்பி இருக்கும். ஆனாலும் பார்வதியை எதிர்த்து மிகவும் காட்டமான குரலை, எஃப்.ஜே போன்ற போட்டியாளர்கள் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். பார்வதி தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என்ற சொல் உளவியலாக போட்டியாளர்களுக்குள் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Bigg Boss Tamil 9 VJ Priyanka Statement One Of The Reason For VJ Parvathy Ruthless Behaviour
Photo Credit:

சேதுபதி: இது மட்டும் இல்லாமல், பார்வதி தொடர்ந்து வீட்டிற்குள் பிரச்னை செய்து கொண்டே இருந்தார். மற்றவர்களை கேலி செய்தார், டாஸ்க்கில் அவர் தோற்றுவிட்டால் கூட சக ஆண் போட்டியாளர்களை அடித்ததை, அடிக்கப் பாய்ந்ததை பார்த்திருக்கிறோம். இதுவே ஒரு ஆண் போட்டியாளர் ஒரு பெண் போட்டியாளரை அடிக்கப் பாய்ந்திருந்தாலோ பிக்பாஸ் தொடங்கி, விஜய் சேதுபதி வரை அனைவரும் அந்த போட்டியாளருக்கு எச்சரிக்கை கொடுத்திருப்பார்கள், ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி இருப்பார்கள். ஆனால் பார்வதிக்கு எதிராக விஜய் சேதுபதியே சின்ன சின்ன எச்சரிக்கைகள், அறிவுரைகளுடன் நிறுத்திக் கொண்டாரே? பார்வதிக்கு ஒரு எல்லோ கார்டு காட்டி இருந்தால், பார்வதிக்கு இந்த அளவுக்கு துணிச்சல் வந்திருக்காது என்ற பேச்சும் ரசிகர்கள் மத்தியில் ஓடிக் கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X