Bigg Boss: தர்பூசணி திவாகருக்கு கல்யாணம் ஆயிடுச்சா? மாலையும் கழுத்துமா நிக்கிறாரே.. சொல்லவேயில்ல

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் கலந்து கொண்டு, கடந்த வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் என்றால் அது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். இவரை கானா வினோத் தர்பூசணி நட்சத்திரம் என்று அழைக்க, பலரும் அதையே தொடர்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் சக பெண் போட்டியாளர்கள் பலரிடமும் ஜொள்ளு விட்டுக் கொண்டு திரிந்த தர்பூசணி திவாகர், ரசிகர்களை தொடர்ந்து கடுப்பேற்றி வந்தார் என்று தான் கூற வேண்டும். இப்படி இருக்கும்போது, பிரபல யூடியூபர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகர் ஜோ மைக்கில் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

ஏற்கனவே கூறியதைப் போல வீட்டில் ஒரு பெண் விடாமல், அனைவரிடத்திலும் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தார். வயதில் மூத்த கனியைப் பார்த்து கூட, கனி அக்கா போன்ற குணமான பெண் தனக்கு மனைவியாக வேண்டும் என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இது மட்டும் இல்லாமல், அண்ணா, அண்ணா என்று அழைத்துக் கொண்டு இருந்த பார்வதியிடம் ஒரு கட்டத்தில் காதலிக்கலாமா என்று சொல்லி ரசிகர்களையும் கடுப்பேற்றிக் கொண்டு இருந்தார்.

Bigg Boss Tamil 9 Watermelon Already Married More Times Told By Joe Michael Praveen
Photo Credit:

அரோரா தொடங்கி சுபிக்‌ஷா வரை பலரிடத்திலும் அநாகரீகமான கேள்விகளை கேட்டார். குறிப்பாக அரோராவை பார்வதியுடன் இணைந்து கொண்டு ஆபாச குறியீடு காட்டினார் என்று பிரச்னையைக் கிளப்பினார். திவ்யா கை கொடுத்த போது, அவரது கையை நசுக்கிவிட்டு, எல்லாம் ஒரு ஆசைக்குத்தான் என்று சொன்னது பலருக்கும் ஷாக் கொடுத்தது.

திருமணமானவரா திவாகர்: இவர் எந்த இடத்திலும் தன்னை திருமணம் ஆனவர் என்று காட்டிக் கொண்டது இல்லை. இப்படி இருக்கும்போது, இணையவாசி ஒருவர் தர்பூசணி திவாகர் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, " தர்பூசணி திவாகர் என்னய்யா இதெல்லாம். சொல்லவேயில்லை" என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த யூடியூபரும் பிக்பாஸ் விமர்சகருமான ஜோ மைக்கில், ஒரு கல்யாண போட்டோதானே பார்த்து இருக்கீங்க. இதுக்கே அதிர்ச்சியான எப்படி. என்னோட டாக்குமெண்டரிக்காக காத்திருங்க" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவை பார்த்து ரசிகர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

Bigg Boss Tamil 9 Watermelon Already Married More Times Told By Joe Michael Praveen
Photo Credit:

எத்தனை திருமணம்?: மேலும் சிலர் அப்படினா இவருக்கு எத்தனை திருமணம் நடைபெற்றுள்ளது என்று கேட்டு வருகிறார்கள். மேலும் பிக்பாஸ் விமர்சகரும் கடந்த சீசன் போட்டியாளருமான ஃபேட் மேன் ரவி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எல்லாம் பேசுவது என்பது சரியானதாக இருக்காது என்று பதிவிட்டார். அதற்கு ஜோ மைக்கேலோ, வனிதா விஜயகுமார் குறித்து நீங்கள் பேசும்போது இந்த சிந்தனை எங்கே சென்றது? நான் இந்த மனிதனின் முகத்திரையை அகற்ற முயற்சிக்கிறேன். அது எனது கடமையும் கூட" என்று பதிவிட்டுள்ளார், தர்பூசணி திவாகருக்கு திருமணம் ஆன தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X