Bigg Boss: கானா வினோத்தை கட்டிப்பிடித்து அழுத தர்பூசணி திவாகர்.. மொத்த வீடுமே அழுதுடுச்சேப்பா!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் ரசிகர்களுக்கு பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், விருப்பமின்மை இருந்தாலும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காம்பினேஷன் என்றால் அது கானா வினோத் மற்றும் திவாகர் கூட்டணி தான். இவர்கள் இருவரும் இணைந்து பேசிக் கொண்டாலே சிரிப்பு கேரண்டி என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. ஆனாலும் இருவரும் எலியும் பூனையுமாக தான் இருந்தார்கள். இப்படி இருக்கும்போது, கானா வினோத் பண பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிய போது தர்பூசணி திவாகர், கானா வினோத்தை கட்டிப்பிடித்து அழுதார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மனதைக் கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது கானா வினோத் பணப்பெட்டியை எடுத்தது தான். ரூபாய் 18 லட்சத்திற்கான பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார் கானா வினோத். அவர் டைட்டிலை வெல்லுவார் என்றும், அதில் சந்தேகமே இல்லை என்றும் ரசிகர்களும் அவரது மனைவி, நண்பர்கள் என பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.

Bigg Boss Tamil 9 Watermelon Diwakar Deeply Cried When Gana Vinoth Took Money Box And Walk Away From BB House

வீட்டிற்குள் சென்ற போட்டியாளர் ரம்யா ஜோ, கனா வினோத்திடம், " அண்ணா நீ டைட்டில் வின் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. காரணம் வாக்கு எண்ணிக்கையில் நீ தான் முதலில் இருக்கிறாய். எனவே பணப்பெட்டியை மட்டும் எக்காரணம் கொண்டும் எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் கானா வினோத் 18 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

கானா வினோத்: இந்த சீசனில் இருந்த சிறந்த போட்டியாளர் இவர் தான். நேர்மையான ஆட்டம், நட்பிற்கு இலக்கணம், தொடர்ந்து பாடல்கள் பாடுவது, டைமிங் காமெடி என கானா வினோத் இருந்தாலே அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். இப்படியான கானா வினோத் டைட்டிலை வெல்வார் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர் பண பெட்டியுடன் வெளியேறினார்.

Bigg Boss Tamil 9 Watermelon Diwakar Deeply Cried When Gana Vinoth Took Money Box And Walk Away From BB House

திவாகர்: ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்த போது கானா வினோத்திற்கும் தர்பூசணி திவாகருக்கும் இடையில் ஒரே மோதலாக இருந்தது. அப்படி இருக்கையில் கானா வினோத்திற்கு யாரும் ஓட்டு போடாதீர்கள் என்று எல்லாம் தர்பூசணி திவாகர் கேமராவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். இப்படி இருக்கையில் கானா வினோத் பணப் பெட்டியுடன் வெளியேறும் போது, தர்பூசணி திவாகர், கானா வினோத்தை கட்டிப்பிடித்து அழுதார். மேலும் கானா வினோத், தர்பூசணி திவாகரின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அழ வேண்டாம் என்று தெரிவித்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் மொத்த வீட்டாருமே கானா வினோத்தை கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X