Bigg Boss: நார்மல் ஆபாச பார்வை.. கேஷுவல் ஆபாச பேச்சு.. ஜெனரல் ஆபாச சிந்தனை.. நார்மலைஸ் செய்யும் திவாகர்!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் கடந்த வாரத்தில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் தர்பூசணி திவாகர். அவர் வீட்டுக்குள் செய்த பல செயல்களும் பேச்சுகளும் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும்போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் அளித்துள்ள பேட்டிகளில் தனது செயல்கள், நடவடிக்கைகள், பேச்சுக்கள் என அனைத்தையும் நார்மலைஸ் செய்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்பத்தி உள்ளது.

அவர் அளித்த பேட்டிகளில் அவரிடத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகளில் ராஜா ராணி டாஸ்க்குக்குப் பின்னர் திவ்யா உங்களுக்கு கை கொடுத்த போது நீங்கள் எதற்காக அவரின் கையை நசுக்குனீர்கள் என்று கேட்டதற்கு, எல்லாம் ஒரு ஆசைக்குத்தான் என்று திவாகர் பதில் அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, திவாகர், அது எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான் என்று பதில் அளிக்கிறார். மேலும் அதை எதார்த்தமாக தான் செய்தேன் என்றும் கூறுகிறார்.

Bigg Boss Tamil 9 Watermelon Diwakar Normalise His Ugly Things After His Eviction
Photo Credit:
நீங்கள் ஏன் சக பெண் போட்டியாளரான அப்சராவை மோப்பம் பிடித்தார். அதேபோல் அரோராவையும் மோப்பம் பிடித்தார். மோப்பம் பிடித்து விட்டு, உடம்பு முழுக்க வாசனை என்றும் கமெண்ட் அடித்தார். இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அது நார்மலாக செய்தேன் என்று பதில் அளிக்கிறார். நான் தவறாக செய்யவில்லை, நான் அப்படிச் செய்திருந்தால், பிரச்னை செய்திருப்பார்கள் என்றும் கூறுகிறார். அதேபோல், அரோராவின் செயலை ஆபாசக் குறியீடு என்று எப்படி உங்களுக்கு தோன்றியது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும், அரோராவுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. பார்வதி ஆபாச குறியீடு பிரச்னையைக் கொண்டு வந்ததும் நான் பார்வதிக்கு சப்போர்ட் செய்தேன் என்று பதில் அளிக்கிறார்.

அதேபோல் போட்டியாளர் சுபிக்‌ஷா குளித்துவிட்டு நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது, அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, என்ன கிளுகிளுப்பா இருக்கா என்று கேட்டார். இது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, அது நான் கேஷுவலாக தான் பார்த்தேன் என்று பதில் அளிக்கிறார்.

Bigg Boss Tamil 9 Watermelon Diwakar Normalise His Ugly Things After His Eviction
Photo Credit:

திவாகர் செய்த செயல்களை எல்லாம் ஒருவர் சமூகத்தில் செய்தால் அவர் கட்டாயம் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார். அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகும். ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல், தான் செய்தது தவறு என்றே உணராத திவாகர், அவரது ஆபாச பார்வை, ஆபாச சிந்தனை, ஆபாச செயல்களை எல்லாம், " நான் கேஷுவலாக தான் பார்த்தேன், நார்மலாகத்தான் செய்தேன், ஜெனரலாக தான் அப்படிச் செய்தேன் என்று அவர் செய்த அநாகரீக செயல்களை எல்லாம் நார்மலைஸ் செய்து கொண்டு இருக்கிறார்.

Take a Poll

அவர் செய்ததில் ஏதாவது ஒன்றை யாராவது ஒரு ஆண் ஒரு பெண்ணுக்குச் செய்தால், என்ன ஆவது, இதில் இத்தனை வாரங்களாக திவாகருக்கு வாக்குச் செலுத்தி அவரை வீட்டிற்குள் தங்க வைத்துள்ளார்கள் என்றால், திவாகரைப் போன்ற மனநிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர் என்ற அச்சமும் தொற்றிக் கொள்கிறது. திவாகர் போன்ற ஒருவரை போட்டியாளராக களமிறக்கி, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி இருக்க வேண்டும் என்ற பேச்சு பலர் மத்தியில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X