வாட்ஸ் அப்பில் வந்த கொலை மிரட்டல்.. பயந்து போன பிக் பாஸ் பிரபலம்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை ஷெரினா. இவர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான வினோதய சித்தம் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் காவல் நிலையத்தில், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார்.
கேரளாவில் பிறந்த இவர், பெங்களூரில் வளர்ந்து இருக்கிறார். மேலும், பெங்களூரில் சாய்ராம் மோட்டார்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், UVI என்ற ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். பிரபலமான மாடல் அழகியான இவர் Grazia Ford Super Model Of India World என்ற பட்டத்தை வென்று இருக்கிறார். பல விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார்.

நடிகை ஷெரினா நண்பர்களுடன் மாலுக்கு சென்றபோது அங்கு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் போட்டியாளர்களுக்கு, ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது. நண்பர்கள் வற்புறுத்தியதால் ஷெரினா அந்த ஆடிஷனில் கலந்து கொண்டார். அந்த போட்டியில், ஷெரினா, ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை ஷெரினா ஒரு வெற்றிகரமான மாடலாகவே ஜொலித்து வருகிறார்.
பிக் பாஸ் ஷெரினா: இவர்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழகு பதுமையாக சுற்றி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால், அது நடக்காமலே போனது. அந்த வீட்டில் வெறும் 28 நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார். பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி தள்ளிவிட்டதால் தலையில் அடிபட்டதாக கூறி ஒரு பெரிய பஞ்சாயத்தையே கூட்டினார். ஷெரினா கீழே விழுந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தலையில் அடிபடவே இல்லை சும்மா நடிக்கிறார் என்றும், இந்த நடிப்புக்கு ஆஸ்கர் விருதே தரலாம் என்றும் இணையத்தில் ஷெரினாவை கழுவி ஊற்றினார்கள். இதைத்தொடர்ந்து கமல் குறும்படத்தை போட்டு காட்டி கொஞ்சம் நஞ்சம் இருந்த மானத்தையும் வாங்கிவிட்டார்.
வினோதய சித்தம் படத்தில்: இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை. ஆனால்,ஷெரினா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே, சமுத்திரகனி நடிப்பில் வெளியான வினோதய சித்தம் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த போதும் ஷெரினாவிற்கு படவாய்ப்பு எதுவும் வரவில்லை.
கொலை மிரட்டல்: சொந்த பிஸ்னஸை கவனித்து வரும் ஷெரினா தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். அதில், வாட்ஸ் ஆப்பில் தன்னையும் தனது சகோதரையும் கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அலுவலக ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் இளையராஜாவை கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











