தாமரையை அப்படியே அலேக்காக தூக்கி சுத்துறாரே பார்த்தா.. குதிரை சவாரி, ஜிப் லைன்.. வேறலெவல் வாழ்க்கை!

சென்னை: பிக் பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துக் கொண்ட பின்னர், ஆண் போட்டியாளர்கள் பெரிய பட வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகர்களாக கலக்கி வரும் நிலையில், ஹீரோயின்கள் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல், வெறும் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை மட்டுமே போட்டு சின்ன சின்ன சான்ஸுக்காக ஏங்கி வருகின்றனர்.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒருத்தரோட லைஃப்பே டோட்டலாக மாறிவிட்டது என்றால் அது தாமரைச்செல்வியின் வாழ்க்கை என்று தான் ரசிகர்கள் கூறுகின்றனர். தனது கணவர் பார்த்தசாரதியுடன் அடிக்கடி வெளியூர்களுக்கு டூர் சென்று அங்கே எடுத்துக் கொண்ட வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை பொறாமை கொள்ளச் செய்கிறார்.

Bigg Boss Tamil fame Thamarai Selvi enjoys horse riding zip line with her husband video makes fans happy
Photo Credit:

ரசிகர்களை மட்டுமின்றி சில சக பிக் பாஸ் போட்டியாளர்களையும் சேர்த்தே தாமரைச் செல்வி பொறாமையடைய செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒண்ணுமே தெரியாது: பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக ராஜு ஜெயமோகன், பிரியங்கா தேஷ்பாண்டே, நிரூப், பாவனி ரெட்டி, அமீர் மற்றும் அபிஷேக் ராஜா பங்கேற்ற சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தெருக்கூத்து கலைஞர் தான் தாமரைச்செல்வி. நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற போது தனக்கு ஒன்றுமே தெரியாது எனக் கூறிக்கொண்டே, மற்ற போட்டியாளர்களின் ஆட்டத்தை நன்றாக கவனித்து அதே போல விளையாடி கடைசி வாரம் வரை சென்றது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சின்னத்திரை தொடர்களில்: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் டிவியில் மேலும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்ற தாமரைச்செல்வி பாரதி கண்ணம்மா 2 உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்தார். தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து நன்றாக சம்பாதித்து வரும் நிலையில், அதை சரியான முறையில் ஜாலியாக குடும்பத்துடன் அடிக்கடி கோவா, கொடைக்கானல் என பல ஊர்களுக்கு சென்று கொண்டாடி வருகிறார்.

முத்த மழை பாடலுடன் ரொமான்ஸ் வீடியோ: தக் லைஃப் படத்தில் இருந்து நீக்கப்பட்ட முத்தமழை பாடலின் சின்மயி வெர்ஷனை பயன்படுத்தி தற்போது தனது கணவருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் தாமரைச்செல்வி. அந்த வீடியோவில் தாமரையை அவரது கணவர் பார்த்தசாரதி அலேக்காக தூக்கிச் சுற்றுவதை எல்லாம் பார்த்து ரசிகர்கள் திருஷ்டி சுத்தி போடுங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

குதிரை சவாரி, ஜிப் லைன் என மஜா பண்றாரே: மலை பிரதேசத்துக்கு கணவருடன் சம்மர் டூர் சென்றுள்ள தாமரைச்செல்வி அங்கே கணவருடன் சேர்ந்து குதிரை சவாரி செய்தும், ஜிப் லைனில் தொங்கியபடியும் என்ஜாய் பண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது வீடியோவுக்கும் அவர் கோர்த்து எடிட் செய்திருக்கும் அந்த முத்த மழை பாடலுக்கும் செம மேட்ச்சாக உள்ளது என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X