Vj Parvathy: முட்ட கலக்கி பாடலுக்கு விஜே பார்வதி போட்ட டான்ஸ்.. கூட யாரு ஆடுறாங்கனு பாருங்க!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் போட்டியாளராக பங்கேற்ற விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் கார் டாஸ்க்கின் போது சாண்ட்ராவை எட்டி உதைத்து கீழே தள்ளிய நிலையில், ஏற்பட்ட பஞ்சாயத்து காரணமாக இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த சீசனில் இருவரில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக மாறுவார் என எதிர்பார்த்த நிலையில், இருவரையும் எதிர்த்து விளையாடிய வைல்டு கார்டு போட்டியாளர் திவ்யா கணேஷ் டைட்டிலை தட்டித் தூக்கினார்.

Bigg Boss Tamil Fame Vj Parvathy and Viyanna dance for Youth movie Mutta kalaki song
Photo Credit:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கம்ருதீன் உடன் சில புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு வந்த விஜே பார்வதி தற்போது பிக் பாஸ் போட்டியாளர் வியன்னாவுடன் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கென் கருணாஸின் முட்ட கலக்கி: படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி, பாடி, ஹீரோவாக நடித்து படத்தையும் இயக்கியுள்ளார் கருணாஸின் மகன் கென் கருணாஸ். தயாரிப்பும் நீங்களா என சுராஜ் வெஞ்சரமுடு கேட்ட நிலையில், ரிஸ்க் எடுக்க விரும்பல சார் என சொன்னதை பேட்டி ஒன்றில் போட்டுக் கொடுத்தார். வரும் மார்ச் 19ம் தேதி ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படத்துக்குப் போட்டியாக யூத் படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

அப்பா தான் விஜய்க்கு எதிர்ப்பு: விஜய் நடித்த யூத் பட டைட்டிலில் ஹீரோவாகவும் இயக்குநராகவும் கென் கருணாஸ் அறிமுகமாகவுள்ள நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு, அப்பா தான் அரசியல் ரீதியாக விஜய்க்கு எதிர்ப்பு, நான் விஜய் சாரோட தீவிர ரசிகன் என கென் கருணாஸ் விளக்கம் அளித்திருந்தார்.

விஜே பார்வதி டான்ஸ்: தமிழ்நாட்டில் தன்னுடன் நடிக்க பல நடிகைகள் முன்வரவில்லை என்கிற குற்றச்சாட்டை வைத்த கென் கருணாஸ் அப்படி வராத நடிகைகள் எல்லாம் இப்போ என் பாட்டுக்கு ரீல்ஸ் பண்ணிட்டு இருக்காங்க என்றும் பேசியிருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் பிரபலங்களான விஜே பார்வதி மற்றும் வியன்னா இருவரும் முட்ட கலக்கி பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் போட்டுள்ளனர். 10 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டான அந்த பாடல் இளைஞர்கள் மத்தியிலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுபவர்கள் மத்தியிலும் பிரபலமாகி உள்ளது. வரும் மார்ச் 19ம் தேதி யூத் படம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வருமா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X