Bigg Boss Tamil 10: பிக் பாஸ் தமிழ் சீசன் 10.. கிராண்ட் லான்ச் எப்போ தெரியுமா?.. ஏகப்பட்ட ஸ்பெஷல்!

சென்னை: பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு செம ஹேப்பியான நியூஸ் கிடைத்துள்ளது. கூடிய விரைவில் பிக் பாஸ் சீசன் 10ஐ களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப் போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தொடர்ந்து ரசிகர்களை என் டர்டெயின் செய்யும் விதமாக ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை களமிறக்கி வருகின்றன.

Bigg Boss Tamil Season 10 Grand Launch Date Leaked
Photo Credit:

தொலைக்காட்சியில் டிவி சீரியல்களை தாண்டி இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல கனெக்ட் மற்றும் வைப் உள்ள நிலையில், பலரும் பிக் பாஸ், செகண்ட் லவ் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு அடிக்ட் ஆவார்கள் என்கிற பல்ஸை பிடித்து விஜய் டிவி களத்தில் குதித்துள்ளது என்கின்றனர்.

ரசிகர்களின் ஃபேவரைட்: சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் ரியாலிட்டி ஷோவாக இதுவரை 9 சீசன்களை பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்துள்ளது. மத்த எந்தவொரு நிகழ்ச்சிக்கும் இந்த அளவுக்கு பொது மக்கள் மத்தியில் ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் விவாதங்கள் எல்லாம் இருந்ததே கிடையாது. பிரபலங்கள் ஒரு வீட்டில் போன் கூட இல்லாமல் 100 நாட்கள் எப்படி சக பிரபலங்களுடன் வாழ்ந்து மக்களை என்டர்டெயின் செய்கின்றனர் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 10 எப்போ?: வரும் செப்டம்பர் 6ம் தேதியே பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி விடும் என தகவல்கள் கசிந்துள்ளன. விஜய் சேதுபதி மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளராக 10வது சீசனையும் தொகுத்து வழங்கப் போகிறார். போன சீசனிலேயே நீச்சல் குளத்தை எல்லாம் திறந்து விட்டு வாட்டர் மெலான் அரை நிர்வாணமாக குளித்து ஆட்டம் போட்ட காட்சிகள் எல்லாம் வெளியான நிலையில், இந்த முறை மேலும், அடல்ட் ரசிகர்களை கவரும் விதமாக பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியும் இருக்கும் என்கின்றனர். ஆனால், இதுவரை பிக் பாஸ் சீசன் 10 ஆரம்ப தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பங்கேற்பு: ஏற்கனவே திருநங்கை போட்டியாளர்கள், இன்ஸ்டா பிரபலங்கள் என சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களை தாண்டி சில சாமானியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில், மேலும், பொதுமக்களையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக கொண்டு வர பிக் பாஸ் குழு ஏற்கனவே அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே பிஆர் சண்டை, சோஷியல் மீடியா ட்ரோல் என அனல் பறக்கப் போகிறது. இந்த முறை யாரெல்லாம் போட்டியாளராக உள்ளே வரப் போகிறார்கள் என்பது குறித்து சீக்கிரமே தகவல்கள் கசியத் தொடங்கியதும் தெரிவிக்கிறோம். பிக் பாஸ் காமன் மேன் என தனி ஷோ ஒன்றும் விரைவில் தொடங்கும் என்கின்றனர். வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X