For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரோசாப்பூ.. சின்ன ரோசாப்பூ.. பிக் பாஸ் சீசன் 5க்கு வராங்களாம் பிரியா ராமன்.. முதல் எவிக்‌ஷனுக்கா?

  |

  சென்னை: நடிகை பிரியா ராமன் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொள்ளப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இன்னொரு படையப்பா எதிர்பாக்கலாம் | Annaatthe | PRO Riyaz Ahmed Excluisve interview | Filmibeat Tamil

  பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியா ராமன் பெயர் அடிபட்ட உடனே நெட்டிசன்கள் ஏகப்பட்ட ட்ரோல்களை போட ஆரம்பித்து விட்டனர்.

  போன பிக் பாஸ் சீசனில் நடிகை ரேகா கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறியதை போல வரும் பிக் பாஸ் சீசனில் முதல் ஆளாக வெளியேறும் நபராக நடிகை பிரியா ராமன் களமிறங்க போகிறாரா என கலாய்த்து வருகின்றனர்.

  150 ரூபாய் கூட இல்லாமல் ஆட்டோக்காரரை ஏமாற்றிய ஒல்லி நடிகை.. என்ன நிலைமை இப்படி ஆகிடுச்சே?150 ரூபாய் கூட இல்லாமல் ஆட்டோக்காரரை ஏமாற்றிய ஒல்லி நடிகை.. என்ன நிலைமை இப்படி ஆகிடுச்சே?

  எதிர்பார்ப்பு ஏன்

  எதிர்பார்ப்பு ஏன்

  மாஸ்டர் செஃப், சர்வைவர் ஏன் விஜய் டிவியிலேயே குக் வித் கோமாளி என ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் வந்த நிலையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் தான் உள்ளது. அதற்கான காரணம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நட்சத்திரங்களின் மேக்கப் இல்லாத முகத்தை பார்க்கும் ரசிகர்கள் அவர்களின் கேரக்டர்களை அறிந்து கொண்டு கொண்டாடவும் ட்ரோல் செய்யவும் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய வாய்ப்புகள் குறிப்பாக ஓட்டுப் போடும் இன்ட்ராக்‌ஷனும் இருப்பதால் அந்த நிகழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

  அக்டோபர் 3ம் தேதி

  அக்டோபர் 3ம் தேதி

  அக்டோபர் மாதம் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் அன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என ரசிகர்களே கணித்து விட்டனர். ஆனால், இன்னமும் விஜய் டிவி அதிகாரப்பூர்வ ஆரம்ப தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் அதற்கான ஷூட்டிங்கை முடித்து விட்டு அறிவித்து விடுவார்கள்.

  குக் வித் கோமாளி பிரபலங்கள் எஸ்கேப்

  குக் வித் கோமாளி பிரபலங்கள் எஸ்கேப்

  குக் வித் கோமாளி சீசன் 2ல் நடிகை ஷகீலா கலந்து கொண்ட நிலையில், பிக் பாஸ் அடுத்த சீசனில் அப்படியே ஷகீலா உள்பட குக் வித் கோமாளி சீசன் 2 கலந்து கொள்ளும் என விஜய் டிவி உட்பட ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், போன சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சி செம வைரலான நிலையில், அதில் கலந்து கொண்ட பலரும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க பறந்து விட்டனர்.

  ஷகீலா மகள்

  ஷகீலா மகள்

  நடிகை ஷகீலாவாவது பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் வரவில்லையாம். ஆனால், அவருக்கு பதிலாக அவரது மகள் மிலா இந்த பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்ஃபார்ம் போட்டியாளர்கள் லிஸ்ட்டிலும் மிலாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

  திருநங்கைகள்

  திருநங்கைகள்

  நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளான திருநங்கை மிலா மற்றும் உலகளவில் இந்தியா சார்பில் அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தி வரும் திருநங்கை நமீதா மாரிமுத்து உள்ளிட்ட பெயர்களும் இந்த பிக் பாஸ் சீசனில் பெருமளவில் அடிபடுகின்றன. தெலுங்கு பிக் பாஸை போலவே இப்படியொரு ஏற்பாடு தமிழ் பிக் பாஸிலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.

  ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

  ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

  இந்நிலையில், நடிகை பிரியா ராமனும் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர் தான் இந்த சீசன் 5ல் என்கிற ஹாட் தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றன. சூர்யவம்சம் திரைப்படத்தில் சின்ராசு புல்லட் எடுத்துக் கொண்டு வார இறுதியானால் இவரைத் தான் பார்க்க கிளம்பிவிடுவார் என்றும் இவருக்கு நெட்டிசன்கள் இன்ட்ரோ கொடுத்து வருகின்றனர்.

  செம்பருத்தி சீரியல்

  செம்பருத்தி சீரியல்

  ஜீ தமிழில் பிரபலமான செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வந்த நடிகை பிரியா ராமன் பல ஆண்டுகளாக பிரிந்து வந்த தனது கணவர் ரஞ்சித் உடன் மீண்டும் இணைந்த நிலையில், விஜய் டிவியில் இருவரும் இணைந்து செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வருகின்றனர். அப்போ இவரும் விஜய் டிவி புராடெக்ட் தான்னு சொல்லுங்க!

  முதல் எவிக்‌ஷன்

  முதல் எவிக்‌ஷன்

  நடிகை பிரியா ராமன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றதும் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சமும் சந்தோஷப்படாமல் நடிகை ரேகாவை போலவே இவரும் இரண்டாவது வாரத்தில் முதல் எவிக்‌ஷனாக வெளியேறத்தானே போகிறார் என பிக் பாஸ் பிரபலங்களை விட பயங்கரமாக ஜோஷியம் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இந்த முறையாவது பழைய ஸ்க்ரிப்ட்களை பயன்படுத்தாமல் கொஞ்சம் புதுசா ஸ்க்ரிப்ட்ட மாத்தி நல்ல டாஸ்க்கா கொடுங்க குருநாதா என பிக் பாஸிடமும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர் ரசிகர்கள்.

  English summary
  Actress Priya Raman trolled by Bigg Boss Tamil fans even her name is not officially announced from the team. If Priya Raman enters into the show she may be the first eviction fans predicts in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X