“அம்மாதான் என் கடவுள்“… மேடையில் கதறி அழுத அபிஷேக் ராஜா!

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கொண்டாட்ட ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் அபிஷேக் ராஜா மிகவும் எமோஷனலாகி கதறி அழுகிறார்.

இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

சினிமா பையன் அபிஷேக் சில வலைதள மீடியாக்களில் பணியாற்றிய அதிக பிரபலங்களை பேட்டி எடுத்து மக்களிடம் பிரபலமானவர்.

அபிஷேக் ராஜா

அபிஷேக் ராஜா

பிக் பாஸ் சீசன் 5-ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் அபிஷேக் ராஜா. பிக் பாஸ் கன்டென்ட்களை கொடுத்து வந்த அபிஷேக் மூன்றாவது வாரத்திலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போது அவர் நடந்து கொண்ட விதம் பலருக்கு பிடிக்கவில்லை இதனால் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

மீண்டும் என்ட்ரி

மீண்டும் என்ட்ரி

இதையடுத்து, 50 நாட்கள் கழித்து வைல்டு கார்டு என்ட்ரியாக மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார் அபிஷேக். அப்போதும், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள் அவர்களை மகிழ்விக்க என்னை கொளுத்திக் கொண்டாவது அவர்களுக்கு என்னால் முடித்த சுவாரசியத்தை கொடுப்பேன் என்று கூறிய அபிஷேக், அந்த வாரமே குறைந்த வாக்குகள் பெற்று மீண்டும் வெளியேறினார்.

பிக் பாஸ் கொண்டாட்டம்

பிக் பாஸ் கொண்டாட்டம்

பிக் பாஸ் கிராண்டு ஃபினாலேவில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை . இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கொண்டாட்ட ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் அபிஷேக் ராஜாவின் அம்மா அழகே அழகே பாடலுக்கு அழகாக நடனமாடுகிறார். என் அம்மாதான் என் கடவுள், அவங்களுக்கு காய்கறிக்கூட வாங்கத் தெரியாது, அவங்களுக்கு தெரிந்தது எல்லாமே அப்பாத்தான், அவர் போன பிறகு அட்ரஸ் இல்லாமல் தொலைந்த குழந்தைகள் போல ஆகிவிட்டோம் என்று மேடையிலேயே அம்மாவை கட்டியணைத்து கதறி அழுகிறார் அபிஷேக் ராஜா.

Recommended Video

Julie -ஐ Target செய்கிறாரா Balaji?? | Bigg Boss Ultimate Tamil
ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவை பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. அபிஷேக்கின் அம்மா அவ்வளவு அழகாக அதில் நடனமாடுகிறார்கள். இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X