கன்ஃபார்மா இந்த நாளில் தான்.. பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது தெரியுமா? விரைவில் ஷூட்டிங்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அது எந்த நாளில் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 5:55 மணிக்கு புதிய லோகோவை நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் புரொமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

டிஆர்பி கிங் நிகழ்ச்சியான பிக் பாஸ் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளதை அறிந்ததும் சமூக வலைதளத்தில் அது தொடர்பான ஏகப்பட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5 வெகு விரைவாகவே தொடங்கவிருக்கிறது. வரும் விநாயகர் சதுர்த்தி அன்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்கிற அறிவிப்புடன் கூடிய புரொமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளதால் நிகழ்ச்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

ஆரி போல

ஆரி போல

கடந்த பிக் பாஸ் சீசனில் நடிகர் ஆரி நேர்மையை யுக்தியாக பயன்படுத்தி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், இந்த முறையும் ஆரி போன்ற போட்டியாளர் தான் டைட்டிலை வெல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஆனால், பாலா ரன்னர் அப் ஆன நிலையில், இந்த முறை போட்டியாளர்கள் பேச தயக்கம் காட்டாமல் இறங்கி விளையாடினால் தான் வெற்றி என்கிற இலக்குடன் நிகழ்ச்சியை அணுகுவார்களா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பிங்க் நிற லோகோ

பிங்க் நிற லோகோ

முந்தைய சீசன்களில் வெளியான பிக் பாஸ் லோகோக்கள் வெறித்தனமாக இருந்த நிலையில், இந்த முறை கொஞ்சம் ஜாலியான டிசைனில் பிங்க் மற்றும் நட்சத்திரம் அடங்கிய லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே ஃபன் நிறைந்து காணப்படும் என்றும் தெரிகிறது.

பெண்ணுக்குத் தான் டைட்டில்

பெண்ணுக்குத் தான் டைட்டில்

பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் ரித்விகா டைட்டிலை வென்றார். மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றார். நான்காவது சீசனில் நடிகர் ஆரி வென்றார். இந்நிலையில், பிக் பாஸ் 5வது சீசன் டைட்டிலை நிச்சயம் ஒரு பெண் போட்டியாளர் தான் வின் பண்ணுவார் என்கிற கணிப்புகளும் நடந்து வருகின்றன. மேலும், பிங்க் நிற கண் லோகோவும் அதைத் தான் குறிப்பதாகவும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணனுக்கா

ரம்யா கிருஷ்ணனுக்கா

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் போட்டியாளராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் நடுவராக உள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 5ல் அவர் கலந்து கொண்டு டைட்டிலையும் தட்டித் தூக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கனி, ஷகிலாவின் மகள் உள்ளிட்ட டஃப் கொடுக்கும் பெண் போட்டியாளர்களும் இந்த சீசனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போ ஆரம்பம்

எப்போ ஆரம்பம்

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் தான் பிக் பஸ் நிகழ்ச்சி தொடங்கும் என தெரிகிறது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பமாகும் என்பது உறுதியாகி உள்ளது. எப்போதுமே ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட துவக்க விழா ஆரம்பித்து நள்ளிரவு வரை செல்லும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி தான் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றைய தேதியில் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பது உறுதியாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X