என் பொண்டாட்டி திட்ட போறா.. பிக் பாஸ் வீட்டில் அலப்பறை செய்த கூல் சுரேஷ்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன்7 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். மேலும், பிக் பாஸ்சீசன் 7 நிகழ்ச்சி ஜனவரி 14ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தை எட்டி உள்ளது. மாயா, விஷ்ணு விஜய், தினேஷ், மணிச்சந்திரா, அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இதில், டைட்டிலை தட்டித் தூக்கக்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல் நெருங்க நெருங்க, எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக வந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் நேற்று முதல் ஆளாக அனன்யா ராவ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். இதையடுத்து அக்ஷயா மற்றும் வினுஷா ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதால், பிக் பாஸ் வீடு மீண்டும் களைகட்டத் தொடங்கி உள்ளது.
இதுக்கு கப்பு வாங்கினால் என்ன வாங்காட்டி என்ன: இதையடுத்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ காலையில் வெளியானது இதில், சரவண விக்ரம் விருந்தினராக உள்ளே வந்துள்ளார். வந்ததுமே மாயாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பேசத் தொடங்கினார். நாம வீட்டிற்குள் இருக்கும் போது வேற மாதிரி இருக்கு. ஆனால், மக்கள் பாக்குறது வேற மாதிரி இருக்கு என்றார். மேலும், மணி நம்ம கூடவே இருந்து ஒவ்வொரு பிரச்சனையிலும் என்னை ஏத்தி விட்டு இருக்கான் என்கிறார். அது மட்டுமில்லா விக்ரம் டைட்டில் வின்னர் என்றாலே விக்ரம் பெயர்தான் வருது. இது போதுமே எனக்கு, இதுக்கு கப்பு வாங்கினால் என்ன வாங்காட்டி என்ன என பெருமையாக பேசிக்கொண்டு துள்ளி குதிக்கிறார். மறுபக்கத்தில் விஷ்ணு மற்றும் மணி, கூல் சுரேஷ் வீட்டுக்கு வந்தால் ஜாலியா இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பொண்டாட்டி திட்டப்போறா: இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் தலைவன் கூல் சுரேஷ் என்ட்ரி கொடுக்கிறார். டைனிங் ஏரியாவில் ஒளிந்திருந்த அவரை எகிறி குதித்து கண்டுபிடித்த மணி அவரை அன்போடு கட்டியணைத்தார். இதையடுத்து என் பொண்டாட்டி என்னை திட்டபோறா என்று சொல்லிக் கொண்டு ஐசு மற்றும் வினுசாவை தூக்கிக்கொண்டு சுற்றுகிறார். இதையடுத்து வழக்கம் போல் சுமால் வீட்டுக்குள் கூல் சுரேஷ் மணி விஷ்ணு அனைவரும் ஒன்று கூடி பழைய கதைகளை பேசுகிறார்.


Click it and Unblock the Notifications











