BB 7: code word இப்படியுமா? சர்ச்சையில் சிக்கிய ஜோவிகா, பூர்ணிமா, மாயா.. டி-ஷர்டில் அந்த வாசகம்

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்களுக்கு பி ஆர் டீம் வேலை செய்து வருவதாக உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பகீர் கிளப்பி இருக்கின்றனர்.

அது போலவே சிலர் போட்டியாளர்கள் பி ஆர் டீம் பற்றி பேசிய வீடியோக்களும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

bigg boss Tamil Season 7 Maya, Purnima and Jovika t-shirt code word to prove
அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சில போட்டியாளர்கள் போட்டிருக்கும் டி-ஷர்ட் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா உட்பட ஒரு சில போட்டிகள் சர்ச்சையில் மாட்டியிருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் கடந்த சீசனில் டைட்டில் வின்னரீக அசீம் தேர்வானது பிஆர்டி உதவியால் தான் என்ற பேச்சு அதிகமாக எழுந்து வந்தது. ஒவ்வொரு வாரமும் அசீம் என்னதான் பிரச்சனை செய்து கமல்ஹாசனிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருந்தாலும் அவருக்கு அதிகமான ஓட்டுகள் ஒவ்வொரு வாரமும் கிடைத்து வந்திருந்தது பலருக்கு அதிர்ச்சி அடைய வைத்தது.

அதனாலேயே அசீமை ஜெயிக்க வைத்தது பிஆர்டி தான் என்று பல கூறிவந்தனர். இப்படியாக இருக்கும் நிலையில் இந்த சீசனிலும் பி ஆர் டீம் பற்றி பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலே உள்ளே வீடியோ ஒற்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பூர்ணிமா டைனிங் ஹாலில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது மாயாவிடம் எனக்கு ஒரு டீசர்ட் அனுப்பி இருக்காங்க என்று சொல்ல, அந்த பேச்சுவார்த்தையில் மாயா அப்படியே நிறுத்தி நீங்கள் எதுவும் பேச வேண்டாம். நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்க என்று கூறுகிறார்.

அதற்கு சரி என்று பூர்ணிமா சொல்ல அதற்கு மாயா உங்களுக்கு இந்த டி-ஷர்ட் எப்போது வந்தது என்று கேட்கிறார். அதற்கு பூர்ணிமா கடந்த வாரத்தில் வந்தது என்று சொல்கிறார். அதற்கு மாயா இது ஏற்கனவே எத்தனை வாரங்களுக்கு முன்பு உள்ளேய டி-ஷர்டோ தெரியவில்லை. சில நேரங்களில் நீங்கள் அவர்கள் அனுப்பிய வாரத்தில் விளையாட்டு சரியில்லாமல் இருந்திருக்கலாம் அதை குறித்து கூட உங்களுக்கு இந்த மாதிரி வாசகம் அனுப்பி இருக்கலாம் என்று மாயா சொல்ல அதற்கு பூர்ணிமாவும் ஆமாம் என்று சொல்கிறார்.

இந்த ஒரு வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது போன்று இன்னொரு வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அதில் தினேஷ், பிரதீப், விசித்ரா போன்றோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது விஷ்ணுவிற்கு வெளியே பி ஆர் டீம் வேலை செய்கிறது என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என பிரதீப் கூறிக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது அதைத் தொடர்ந்து. அந்த வரிசையில் இப்போது நேற்று பிரதீப் மணி ரவீனா போன்றோர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அர்ச்சனாவிற்கு பி ஆர் டீம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை சிலர் வைத்திருக்கின்றனர். இப்படியாக போட்டியாளர்களுக்குள் ஒரு பரபரப்பு இருக்கும் நிலையில் இவர்கள் போடும் டி-ஷர்டில் இருக்கும் வசனங்களும் இவர்கள் சொல்வது உண்மைதானோ என்று என்ன தோன்றுகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது பிக் பாஸ் தமிழ் சீசன் 3 போது சாண்டி மாஸ்டருக்கு அவருடைய மனைவி அந்த நேரத்தில் சாண்டி குறித்து வெளியே டிரண்ட் ஆகிய வசனத்தை டி-ஷர்டில் பதிவு செய்து அனுப்பியிருந்தார். அதுபோல இப்போது வனிதாவின் மகளான ஜோவிகா போட்டிருந்த டி-ஷர்டில் ஒரு வசனம் பதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிங்கம் சிங்கிளாக தான் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதாவது இப்போதைய சூழ்நிலையில் மாயா கேங் உடன் சேர்ந்து ஜோவிகா விளையாட கூடாது என்பதை மறைமுகமாக வனிதா இப்படி சொல்லி அனுப்பி இருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பூர்ணிமா எனக்கு மஞ்சள் டீ சர்ட் வந்திருக்கிறது என்று வருத்தப்பட்ட வீடியோ வெளியானதிலிருந்து அப்போ பி ஆர் டீம் இவர்களுக்கு கோட் வேர்ட் டீஷர்டில் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் விஷ்ணு ஒவ்வொரு வாரமும் தன்னுடைய விளையாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் விஷ்ணு தன்னுடைய விளையாட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கிறார். என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X