Bigg Boss Tamil 7 Title Winner: பிக் பாஸ் 7 டைட்டிலை தட்டித் தூக்கியவர் இவர் தானா.. லீக்கான தகவல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் கடைசியாக ரசிகர்களுக்கு கசிந்து விட்டது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். மேலும், எவிக்ட் ஆன விஜய் வர்மா மற்றும் அனன்யா என இருவரும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். இந்நிலையில், இந்த சீசன் டைட்டிலை வைல்டு கார்டு போட்டியாளர் தான் தட்டித் தூக்கி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கமல்ஹாசன் 7வது சீசன் வரை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன் ஏகப்பட்ட விமர்சனங்களுடன் கடந்து வந்த நிலையில் ஒரு வழியாக கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்கும் நடைபெற்றது.

Bigg Boss Tamil Season 7 Title Winner details leaked?

கிராண்ட் ஃபினாலே: இவிபி சிட்டியில் கிராண்ட் ஃபினாலே ஷூட்டின் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சீசனில் டைட்டிலை வெல்லப் போவது யார் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. கூடிய விரைவிலேயே டைட்டிலுடன் வின்னர் புகைப்படம் எல்லாம் சமூக வலைதளத்தில் தீயாக பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாயாவா? அர்ச்சனாவா?: இந்த சீசன் டைட்டிலை மாயா தூக்கப் போகிறாரா? அல்லது அர்ச்சனா தூக்கப் போகிறாரா? என்கிற கேள்வி தான் அனைத்து பிக் பாஸ் ரசிகர்கள் மனங்களிலும் எழுந்துள்ளது. அந்தளவுக்கு இந்த சீசன் பல ட்விஸ்ட் மற்றும் டர்ன்களுடன் நகர்ந்து கொண்டே சென்றது. மாயாவுக்கு சேனல் சப்போர்ட் மற்றும் கமல்ஹாசன் சப்போர்ட் இருப்பதாக விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இந்த டைட்டிலை தட்டித் தூக்கியது யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

Bigg Boss Tamil Season 7 Title Winner details leaked?

டைட்டில் வின்னர் யாரு: மாயா, மணி, தினேஷ், விஷ்ணு மற்றும் அர்ச்சனா உள்ளிட்ட 5 பேர் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் ஃபைனல் போட்டியாளர்களாக இருந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டிலை விஜே அர்ச்சனாவுக்குத்தான் சென்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், மாயா ரன்னர் அப் கூட இல்லை என்றும் ரன்னர் அப்பாக மணியும் 3வது இடத்தில் மாயா மற்றும் கடைசி இடத்தில் தினேஷ் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிப்பெற்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படும் என்றும் தெரிகிறது. நாளை பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X