Bigg Boss 8 Tamil: என்னங்க இப்படியாகிப்போச்சு.. இந்த வாரம் வெளியேறிய சுனிதா.. அதிர்ச்சியில் அன்ஷிதா!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார். எப்போதுமே ஒரு சீசனுக்கு அடுத்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். அதேபோல் இந்த சீசனுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வரவேற்பு புஸ்வானமாகிவிட்டது. சுவாரஸ்யமே இல்லாமல் நகரும் ஒவ்வொரு நாள் எப்பிசோடையும் பார்ப்பதற்குள் ரசிகர்களுக்கு போதும்போதும் என ஆகிவிடுகின்றது. இப்படியான நிலையில், பிக்பாஸ் சீசன் 8இன் 5வது வாரத்தில் சுனிதா எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை, ஃபேட்மேன் ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என மூன்றுபேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே வீட்டில், முத்துக்குமரன், வி.ஜே. விஷால், அருண், தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, சத்யா, சௌந்தர்யா, ஜாக்குலின், சுனிதா, அன்ஷிதா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாஞ்சனா மற்றும் ஆனந்தி என 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி பிக்பாஸ் வீட்டில், புதிதாக ரயான், ரியா தியாகரஜன், மஞ்சரி, வர்ஷினி வெங்கட், ஷிவ் குமார் மற்றும் ராணவ் என 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் உள்ளே சென்றுள்ளார்கள்.

வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே 6 பேர் சென்ற போதும்கூட ஆட்டத்தில் சுவாரஸ்யம் துளியும் கூடவில்லை என்பதை விஜய் சேதுபதியே ஒப்புக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் என்றாலே, அது வீக் எண்டில் விஜய் சேதுபதி வருவதுதான். கடந்த வாரத்தில் தீபாவளி வாரம் எனக் கூறி யாரையும் எலிமினேட் செய்யவில்லை. மேலும் 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே சென்றார்கள்.

நாமினேஷன்: இப்படியான நிலையில், இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஏற்கன்வே வீட்டில் உள்ள போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டார்கள். மேலும் ஓபன் நாமினேஷன் நடைபெற்றதால், போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாகவே நாமினேட் செய்தார்கள். அந்தவகையில், இந்த வார நாமினேஷனுக்கு மொத்தம் 11 போட்டியாளர்கள் ஆளானார்கள். அதில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், தீபக், அருண், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, ஆனந்தி, சுனிதா, சாச்சனா, ரஞ்சித் என இவர்கள் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர்.

சுனிதா: இவர்களில் அதிக வாக்குகள் மக்கள் மத்தியில் பெருபவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள், அதாவது போட்டியில் தொடருவார்கள். குறைவான வாக்குகள் பெறுபவர்கள் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள். அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் இருந்தவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளராக சுனிதா உள்ளார் எனவும், அவர்தான் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் எனவும் பிக் பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் சுனிதா ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுனிதா வெளியேறும்போது, பிக் பாஸ் வீட்டில் அவருக்கு நெருக்கமாக இருந்த அன்ஷிதா கதறி அழுதுள்ளார். ஏற்கனவே அன்ஷிதாவுக்கு நெருக்கமான அர்னவ் வெளியேறியபோதும் அன்ஷிதா உடைந்து அழுதார். தற்போது சுனிதா வெளியேறியுள்ளதால் அன்ஷிதா பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











