Bigg Boss 8: எவிக்ட் ஆனதும் ப்ரேக்-அப் செய்து கொண்ட அன்ஷிதா.. வீட்டுக்கே போய் சண்டை..இப்போ செம ஹேப்பி

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் பலருக்கும் பிடித்த போட்டியாளர்களில் ஒருவர் அன்ஷிதா. சின்னத்திரை பிரபலமான இவர், தனது அட்டகாசமான ஆட்டத்தினால் ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். இவர் பேசிய பல இணயத்தில் ட்ரெண்ட் ஆனது. இன்று பிக் பாஸ் இறுதி நாளில் இருக்கும், விஜய் சேதுபதி, அன்ஷிதாவிடம், எவிக்ட் ஆகி வெளியே போனதும் செய்த முதல் விஷயம் என்ன எனக் கேட்டார். இதற்கு அன்ஷிதா அளித்த பதில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இந்த வாரத்தின் இறுதியுடன் இன்றுடன் அதாவது ஜனவரி 19ஆம் தேதி, முடிவடைகின்றது. இந்த சீசனில் டாப் 5 போட்டியாளர்களாக, முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால்,பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரயான் டிக்கெட் டூ ஃபினாலே மூலம், நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் வீட்டில் இருந்து 20வது ப்ளேயராக வெளியேற்றப்பட்டார்.

bigg boss tamil bigg boss tamil8 anshidha

இந்த சீசனின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தான் என ரசிகர்கள், இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்களில் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் எனக் கூறுகின்றார்கள். பிக் பஸ் சீசனில் நேற்றைய எபிசோட் ஒளிபரபப்படவில்லை. இதனால் கிராண்ட் ஃபினாலே ஒட்டுமொத்தமாக இன்று ஒளிபரப்பட்டது.

அன்ஷிதா: இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில், பங்கேற்று, ஏற்கனவே எவிக்ட் ஆன போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிக் பாஸ் போட்டியில் இருந்து எவிக்ட் ஆன பின்னர், செய்த முதல் வேலை என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அன்ஷிதா பதில் அளிக்கும்போது, இந்த சீசனுக்கு வரும்போது பெரும் நம்பிக்கையோடு இருந்தேன். இந்த சீசனின் மூன்றாவது வாரத்தில் இருந்து எனது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பித்தது. அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

எக்ஸ்: பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னர் நான், ஒருவரிடம் எப்போதும் கெஞ்சிக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தேன். பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியே வந்ததும், நான் அந்த நபரைச் சந்தித்து, திட்ட ஆரம்பித்தேன். இனிமேல் அவர் என்னோட வாழ்க்கையில் இல்லை எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன். அவர் அவருடைய புது காதலியுடன் ஜாலியாக இருக்கின்றார்” எனக் கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அன்ஷிதா கூறிய அந்த நபர் அர்னவ் தான் என, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X