BB 8: முத்துக்குமரனை மண்டையில தட்டி உட்கார வெச்சாச்சு.. எகத்தாளமாக சொன்ன அருண்.. கிளம்பிய எதிர்ப்பு!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசன் இதற்கு முந்தைய சீசன்களை விடவும் மிகவும் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் ஏமாற்றம்தான் ஏற்பட்டு வருகின்றது. இந்த சீசனில் இருக்கும் ஒரே உருப்படியான விஷயம் என்றால் அது, விஜய் சேதுபதிதான் என ரசிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர் முத்துக்குமரன் குறித்து அருண் பேசியுள்ள வார்த்தைகள் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே கூறியதைப்போல், 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை, ஃபேட்மேன் ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என மூன்றுபேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே வீட்டில், முத்துக்குமரன், வி.ஜே. விஷால், அருண், தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, சத்யா, சௌந்தர்யா, ஜாக்குலின், சுனிதா, அன்ஷிதா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாச்சனா மற்றும் ஆனந்தி என 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதாவது அக்டோபர் 3ஆம் தேதி பிக்பாஸ் வீட்டில், புதிதாக 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் உள்ளே சென்றுள்ளார்கள்.

அதாவது ரயான், ரியா தியாகரஜன், மஞ்சரி, வர்ஷினி வெங்கட், ஷிவ் குமார் மற்றும் ராணவ் என 6 பேர் சென்றுள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் 5வது வாரத்திலோ அல்லது 6வது வாரத்திலோதான் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுபப்படுவார்கள். ஆனால், இந்தமுறை நான்காவது வாரத்திலேயே போட்டியாளர்கள் உள்ளே அனுப்பக் காரணமே உள்ளே உள்ள போட்டியாளர்கள் கண்டெண்ட் கொடுப்பதில்லை என்பதுதான் என்ற பேச்சு அடிபடுகின்றது.
முத்துக்குமரன்: ஏற்கனவே சீசன் 8இன் நேரடிப் போட்டியாளர்கள் வீட்டிற்குள் செல்லும்போது, முத்துக்குமரன் பலரது கவனத்தினை ஈர்த்திருந்தார். அதன் பின்னர் இரண்டு வாரங்கள் விஜய் சேதுபதி, பிக்பாஸ், சக போட்டியாளர்கள் என பலரது பாராட்டுகளைப் பெற்றார். கில்லர் காயின் போட்டியின்போது, முத்துக்குமரனின் ஐடியாவை ஆண்கள் அணியினர் பின்பற்றியதால், பல விளைவுகளைச் சந்தித்தார்கள். இதனால் விஜய் சேதுபதி மிகவும் காட்டமாக முத்துக்குமரனை விளாசினார்.
லெஃப்ட் &ரைட்: இப்படியான நிலையில், கடந்த வாரத்தில் முத்துக்குமரன் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு பிக்பாஸிடம் பாராட்டுகளைப் பெற்ற பின்னர், போட்டியாளர்களிடம் தனது கேப்டன்சி குறித்து கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சி செய்தார். அப்போது அவர் மிகவும் கோபமாக நடந்து கொண்டது குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். இன்னும் சொல்லப்போனால் லெஃப்ட் & ரைட் வாங்கிவிட்டார் எனலாம். இதனால் முத்துக்குமரன் வீட்டில் அமைதியாகவே காணப்படுகின்றார்.
அருண்: இன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து 24X7இல் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, அருண் மற்றும் வி.ஜே. விஷால் பேசிக்கொண்டு உள்ளார்கள். அப்போது வி.ஜே. விஷால் இப்போது ஆட்டமே முத்துகுமரனா அல்லது மஞ்சரியா என்பதாகத்தான் இருக்கும் எனக் கூறினார். அதற்கு அருண், முத்துக்குமரனை எல்லாம் மண்டையில தட்டி உட்காரவெச்சாச்சு, இவன்தான் ஓடிட்டு காமெடி பண்ணிட்டு இருக்கான்" எனக் கூறினார். அருண் இதுவரை வீட்டில் யாரையுமே காயப்படுத்துவதைப்போல் பேசாமல் இருந்தார். ஆனால் அவர் இப்போது இப்படிப் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அருணின் இந்த எகத்தாளப் பேச்சுக்கு முத்துகுமரனின் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











