Bigg Boss 8: 6 பேருக்கு மட்டும் அவார்ட் கொடுத்து அழகுபார்த்த BB.. யார் யாருக்கு என்னென்ன தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்றுடன் அதாவது ஜனவரி 19ஆம் தேதியோடு முடிவுக்கு வந்துள்ளது. நேரடிப் போட்டியாளர்கள், வைல்ட் கார்டு எண்ட்ரீ போட்டியாளர்கள் என மொத்தம் 24 போட்டியாளர்கள், கலந்து கொண்டனர். இதில் மக்களின் அன்பைச் சம்பாதித்த போட்டியாளர்கள், அதிருப்தியைச் சம்பாதித்த போட்டியாளர்களும் உள்ளார்கள். இப்படியான நிலையில் இந்த சீசனில் விளையாடிய போட்டியாளர்களில் ஆறு போட்டியாளர்களுக்கு மட்டும், பிக் பாஸ் தரப்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இந்த சீசனில் களமிறங்கிய போட்டியாளர்கள் அனைவரும், மிகவும் ஸ்பெஷல்தான். டாஸ்க் என வரும்போது டாஸ்க்கில் கவனம் செலுத்துவது, ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொள்வது என மொத்த போட்டியாளர்களும் சேர்ந்து இந்த சீசனை ஒரு அழகான சீசனாக, மாற்றிவிட்டார்கள். இந்த சீசனில் களமிறங்கிய போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருந்தது. அவர்கள் இந்த விளையாட்டினை விளையாடிய விதம், ரசிகர்கள் பலரும் தங்களோடு பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள்.

bigg boss tamil bigg boss 8 bb awards 8

இந்த சீசன் முடிய முடிய , போட்டியாளர்கள் வெளியேற வெளியேற கண்ணீர் சிந்திய ரசிகர்கள் ஏராளம், ஜாக்குலின் வெளியேறியதால் ரசிகை ஒருவர், குறைந்த ரத்த அழுத்தத்தால், மருத்துவமனையில் அனுமதி ஆனார். அந்த அளவுக்கு இந்த சீசனோடும் போட்டியாளர்களோடும் ரசிகர்கள் பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள்.

தீபக், ஆனந்தி: இப்படியான நிலையில் போட்டியாளர்களில் ஆறு பேருக்கு மட்டும், பிக் பாஸ் தரப்பில் இருந்து, விருதுகள் அளிக்கப்பட்டது. அதில் கேப்டன் ஆஃப் த சீசன் என்ற விருதினை போட்டியாளார் தீபக் தினகரனுக்கு வழங்கினர். இது மட்டும் இல்லாமல், அவர் வெளியேறும்போது இந்த சீசன் மட்டும் இல்லாமல், இதுவரையிலான அனைத்து சீசனிலும் தீபக் தான் சிறந்த கேப்டன் என பிக் பாஸ் பாராட்டியிருந்தார். போட்டியாளர் ஆனந்தி வெளியேறியது, ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சிதான். ஆனால் அவர் வீட்டிற்குள் இருந்தவரை, மிகவும் தெளிவான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். குறிப்பாக எங்கு பேசவேண்டும், எங்கு பேசக்கூடாது என அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் அவருக்கு மாஸ்டர் Stategiest என்ற விருது வழங்கப்பட்டது.

ரானவ், ரயான்: வைல்ட் கார்ட் மூலம் உள்ளே சென்ற ரானவ். தான் எந்த இடத்தில் எல்லாம், தன்னால் அட்டேன்சன் உருவாக்க முடியுமோ அதனை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். எனவே அவருக்கு அட்டேன்சன் சீக்கர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. களமிறங்கியதில் இருந்து தான் கலந்து கொள்ளும் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கிலும் அட்டகாசமாக விளையாடியவர் ரயான். இவருக்கு டாஸ்க் பீஸ்ட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

மஞ்சரி, ஜாக்குலின்: அதேபோல் சிறப்பான போட்டியாளராக மட்டும் இல்லாமல், தகுதியான போட்டியாளராக இருந்தவர் மஞ்சரி. அவருக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் 15 வாரங்களுமே நாமினேட் செய்யப்பட்டு, இறுதி வரை மக்கள் அன்பைப் பெற்ற ஜாக்குலின்க்கு சூப்பர் ஸ்ட்ராங் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X