அன்ஷிதாவுக்கு மறைமுகமாக அதைக் கொடுத்த அர்னவ்.. 'அம்புட்டு நல்லவனா நீ' என கலாய்க்கும் பாய்ஸ்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. புது ஹோஸ்ட்டான விஜய் சேதுபதி 'ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு ' எனக் கூறி போட்டியாளர்களை லெஃப்ட் ரைட் வாங்கி வருகின்றார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய முதல் வாரத்தில் இருந்து விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துவிட்டார். இந்த சீசன் பாய்ஸ், கேர்ள்ஸ் என்ற தீமின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றது. இந்நிலையில் அர்னவ் தனது பாய்ஸ் அணியிடம் எதுவும் கூறாமல், அன்ஷிதாவுக்கு சுடு தண்ணீர் கொடுத்தது பாய்ஸ் டீமில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சிசன் 8இல் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் முதல் வாரத்தில் ஆண்கள் அணியில் இருந்து ஃபேட் மேன் ரவீந்தர் வெளியேறினார். இதுமட்டும் இல்லாமல் இரண்டாவது வாரத்தின் நிலைமையைப் பார்க்கும்போது, இரண்டாவது வாரத்திலும் ஆண்கள் அணியில் இருந்துதான் ஒருவர் வெளியேறப்போகின்றார் என பிக் பாஸ் ரசிகர்கள் பேசிக்கொண்டு உள்ளனர். குறிப்பாக அர்னவ் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

காரணம் அர்னவ் விளையாட்டில் கவனம் ஈர்க்கும் விதமாக எதுவும் செய்யவில்லை என்றும், ஒரு பிரச்னை ஏற்படும்போது தனது கருத்தினை மிகவும் தெளிவாகவோ அல்லது உறுதியாகவோ எடுத்து வைக்காமல் உள்ளார். கூட்டத்தில் ஒருவராகத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளார். சாச்சனா மீண்டும் திரும்பி வந்தபோது கூட, தனது பிக் பாஸ் ட்ராஃபியைக் கொடுத்தது ஜஸ்ட் கவனம் ஈர்க்கத்தான் என பிக் பாஸ் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றார்கள். ஆனாலும் அது அவருக்கு பெரிய அளவில் எடுபடாது என கூறப்படுகின்றது.

அர்னவ்- அன்ஷிதா: இந்நிலையில் இந்த சீசனில் பிக் பாஸ் போட்டி என்பது ஏற்கனவே கூறியதைப்போல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான போட்டியாகத்தான் நடைபெறுகின்றது. ஏற்கனவே வீட்டிற்குள் செல்லும்போது விஜய் சேதுபதியிடம் பல்பு மேல் பல்பு வாங்கிக்கொண்டுதான் சென்றார். இவருக்கும் அன்ஷிதாவுக்கும் இடையில் ஏற்கனவே நல்ல பழக்கம் இருப்பது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். இன்னும் சொல்லப்போனால், அர்னவின் மனைவி திவ்யா சொல்லித்தான் இவர்கள் இருவருக்கும் பழக்கம் இருப்பது பலருக்கும் தெரியவந்தது. இன்னும் சொல்லப்போனால் திவ்யாவை விவாகரத்து செய்துவிட்டு, அன்ஷிதாவை மணக்க அர்னவ் திட்டமிடுவதாக திவ்யா தெரிவித்திருந்தார்.
விவாதம்: இந்நிலையில் இருவரும் பிக் பாஸில் பங்கேற்றது என்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கிளப்பியது. ஆனால் போட்டியின் தீம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான போட்டிதான் என்பதால் இவர்கள் இருவரும் அதிகம் நேரம் செலவிட முடியாமல் உள்ளது. ஆனாலும் இருவரும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டுதான் உள்ளார்கள். இதுமட்டும் இல்லாமல், ஆண்கள் அணிக்குத் தெரியாமல் அன்ஷிதாவுக்கு, அர்னவ் சுடு தண்ணீர் கொடுத்தது ஆண்கள் அணியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
வீடியோ: அதாவது பெண்கள் அணியில் ஒருவருக்கு ஆண்கள் அணியில் இருந்து எதாவது கொடுக்கின்றார்கள் என்றால், ஆண்கள் அணியில் உள்ள மற்றவர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் அர்னவ் அதுபோல் ஆலோசனை எதுவும் மேற்கொள்ளாமல், அன்ஷிதாவுக்கு சுடு தண்ணீர் கொடுத்துள்ளார். இது ஆண்கள் அணியினருக்கு தெரியவந்ததும், ஆண்கள் அணியினர் அர்னவை நோக்கி காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ எடுத்த இணையவாசிகள் செம காமெடியாக எடிட் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











