Bigg Boss Tamil 8: பிக் பாஸ் டைட்டிலை விட பல மடங்கு அதிகம்.. ஜாக்குலின் இப்பவே கோடீஸ்வரிதான் போல!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து அதாவது அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டு இருக்கும் 18 நட்சத்திரங்கள் இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டனர். 24 மணிநேரத்தில் முதல் எவிக்‌ஷன் நடைபெற்றது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுமட்டும் இல்லாமல் இந்த வாரம் நாமினேஷன் தொடங்கிவிட்டது.

இதில் அதிகமானோர் டார்கெட் செய்தவர்களில் தொகுப்பாளர் ஜாக்குலின் மிகவும் முக்கியமானவராக உள்ளார். இவர் இந்த வாரம் வெளியேறுவாரா அல்லது மக்கள் ஆதரவைப் பெற்று தாக்குபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் இந்நிலையில் ஜாக்குலினின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

bigg boss tamil season 8 bigg boss tamil 8 jacqueline net worth 8

ஜாக்குலினுக்கு தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் மிகவும் குடைச்சல் கொடுக்கும் போட்டியாளராக இருப்பது சுனிதா. சக போட்டியாளரான சுனிதா முதல் நாளில் இருந்து ஜாக்குலினை டார்கெட் செய்து வருகின்றார். இது குறித்து ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஜாக்குலின் மற்றும் சுனிதா என இருவருமே விஜய் டிவி பிரபலங்கள்தான் என்றாலும், சுனிதா சீனியர். ஆனால் ஜாக்குலின் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றியவர். ஆனால் சுனிதா ஜோடி நம்பர் 1இல் தொடங்கி இப்போது குக் வித் கோமாளியில் கோமாளி வரை விஜய் டிவியில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளார்.

bigg boss tamil season 8 bigg boss tamil 8 jacqueline net worth 8

ஈகோ: இதனால் ஜாக்குலினுக்கும் சுனிதாவுக்கும் இடையில் தற்போது நடப்பது சீனியர் ஜூனியர் ஈகோ கிளாஷ் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சுனிதா பெண்கள் பிரிவில் முதல் நாளில் இருந்தே தனது சக போட்டியாளர்களை மூளைச் சலவை செய்து வருகின்றார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு சில போட்டியாளர்கள் சுனிதாவின் சொல்லுக்கு மயங்கி சுனிதா சொல்வதைக் கேட்கின்றார்கள் எனவும், ஆனால் ஜாக்குலின் தான் தனது குரலை உயர்த்திப் பேசியுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.

bigg boss tamil season 8 bigg boss tamil 8 jacqueline net worth 8

வரவேற்பு: இரண்டாவது நாளில் கூட ஜாக்குலின் அழுது கொண்டு இருக்கும் போது சுனிதா அதனைக் கண்டுகொள்ளாமல் சென்றார். ஏன் அழுகின்றாய், அழாதே என எதுவுமே கூறவில்லை. அதேபோல் சுனிதா சொல்வதை அப்படியே கேட்கக்கூடிய நபராக இருக்கின்றார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படியான நிலையில் தொகுப்பாளினி ஜாக்குலினின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

bigg boss tamil season 8 bigg boss tamil 8 jacqueline net worth 8

சொத்து மதிப்பு: அதாவது ஜாக்குலின் தனது திரை வாழ்க்கையை தொகுப்பாளினியாக தொடங்கியவர். அதன் பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் முக்கிய அங்கம் வகித்து வந்தார். குறிப்பாக ஆண்டாள் அழகர் தொடரில் நடித்தார். தேன்மொழி பி.ஏ என்ற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தான் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு தனது முழு முயற்சியை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தன் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளார். சினிமாவில் இவர் கோலமாவு கோகிலா படத்தில் படம் முழுவதும் வரக்கூடியபடி நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்‌ஷனின் தோழியாக நடித்திருந்தார். இவரது சொத்து மதிப்பு ரூபாய் 1 கோடி முதல் 3 கோடிகள் வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X