பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. அமலா ஷாஜி முதல் மாகாபா ஆனந்த் வரை.. அடிபடும் அட்டகாசமான பெயர்கள்!
சென்னை: விஜய் டிவியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரம்மாண்ட ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்த முறையும் அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பல விமர்சனங்களுக்கு மத்தியில் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 8வது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்றே கூறுகின்றனர். கடந்த சில சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி டல் அடித்து வருகிறது என்கிற விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், பிக் பாஸ் குழு இந்த முறை போட்டியாளர்கள் தேர்வில் ரொம்பவே கவனத்துடன் செயல்படுகிறது என்றும் போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

சில பிரபலங்கள் நிச்சயம் பங்குபெற போகின்றனர் என்கிற தகவல்களும் கசிந்து வரும் நிலையில், அப்படி யார் பெயர் எல்லாம் அடிபட்டு வருகிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
பிக் பாஸ் சீசன் 8: ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்றைக்கு முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். சில முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். ஆரவ், ஹரிஷ் கல்யாண், கவின், ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, லாஸ்லியா, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ஜனனி உள்ளிட்ட பலர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த செட் பிரபலங்களை உருவாக்க பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் சில மாதங்களில் ஆரம்பமாக காத்திருக்கிறது.
அமலா ஷாஜி: மலையாள பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்ற அமலா ஷாஜி அடிக்கடி சென்னை வந்து செல்லும் நிலையில், பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். சமீபத்தில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய அவருக்கு கோலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காதலியுடன் டிடிஎஃப் வாசன்: சர்ச்சை நாயகனாகவே சமீப காலமாக வலம் வரும் மஞ்சள் வீரன் டிடிஎஃப் வாசன் அடுத்ததாக ஐபிஎல் எனும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், சிங்கத்தை பிடித்து 3 மாதங்கள் சிறையில் அடைக்க விஜய் டிவி திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். குக் வித் கோமாளி பிரபலமாக இருக்கும் அவரது காதலி ஷாலின் ஜோயாவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசன் பங்கேற்பாரா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
மாகாபா ஆனந்த்: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்கள் ஒவ்வொரு சீசன்களாக பிக் பாஸ் போட்டியாளர்களாக உள்ளே வருகின்றனர். பிரியங்கா தேஷ்பாண்டே பிக் பாஸ் போட்டியாளராக கலக்கிய நிலையில், மாகாபா ஆனந்த் இந்த முறை பிக் பாஸ் போட்டியாளராக மாற நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
கிரண் முதல் சோனியா அகர்வால் வரை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக் டூப்பு குக் நிகழ்ச்சியில் போட்டியாளராக சோனியா அகர்வால் பங்கேற்றார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் அவரை ஒவ்வொரு சீசனாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரண் பெயரும் இந்த முறை அடிபட்டு வருகிறது. மேலும், ரோபோ சங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா சங்கர், சிவாங்கி உள்ளிட்ட பல பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இதுவரை உறுதியாக யார் யார் உள்ளே வரப் போகின்றனர் என்பது குறித்த தவல்கள் வெளியாகவில்லை. விரைவில், தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











