Bigg Boss Day 2 : அணி மாறிய பவி - முத்து.. தேம்பி தேம்பி அழுத ஜாக்குலினை கண்டுக்காத சுனிதா..

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வீட்டில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் ஆண்கள் அணி பெண்கள் அணி என பிக் பாஸ் பிரித்து விட்டு அவர்களுக்கு இடையில் சண்டை மூட்டலாம் என நினைத்துக் கொண்டு இருக்கையில், பெண்கள் அணியினர் ஆண்களுடன் நாங்க அப்பறமா சண்டை போட்டுக்குறோம் பிக்பாஸ், இங்க நாங்க தீர்க்கவேண்டிய வெளி பஞ்சாயத்தே அதிகம் இருக்கு, எனவே அதையெல்லாம் முடிச்சிட்டு வந்துடுறோம் என சொல்லாமல் சொல்லும் அளவிற்கு அடித்துக் கொள்கின்றார்கள். இப்படியான நிலையில் இரண்டாவது நாளில் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

முதல் நாளைப் போலவே, இரண்டாவது நாளிலும் ஜாக்குலின் தனியாகவே படுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கின்றார். கேப்டன் தர்ஷிகா காலையில் எழுந்து யாரெல்லாம் முழித்துக்கொண்டார்களோ அவர்களிடம் போய் பேசி, தன்னை யாரும் அடுத்த வாரம் நாமினேட் செய்துவிடக்கூடாது என்பதற்காக சக போட்டியாளர்களை கொஞ்சம் தனக்கு நெருக்கமானவர்களாக மாற்றும் முயற்சியில் இருக்கின்றார்.

bigg boss tamil season 8 bigg boss tamil sunita jacquline

ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் அனுப்பவேண்டும் என பிக்பாஸ் சொல்ல, ஆண்கள் அணியினர் இதற்காக ஒருமனதாக பேசி முத்துக் குமரனை அனுப்ப முடிவெடுத்தார்கள். அதேபோல் பெண்கள் அணியில் இருந்து யாரை அனுப்புவது என்ற முடிவை எடுப்பதற்குள் பெண்கள் முடியைப் பிடித்துக் கொண்டு சண்டை போடாத குறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டனர். இறுதியாக பவித்ரா ஜனனியை அனுப்புவதாக முடிவெடுத்தனர்.

bigg boss tamil season 8 bigg boss tamil sunita jacquline

அணி மாற்றம்: பிக்பாஸ் கூறியதைப்போல் இருவரும் அணி மாறிக் கொண்டனர். இதனால், முத்து பெண்கள் அணிக்காக விளையாடவேண்டும், பவித்ரா ஆண்கள் அணிக்காக விளையாட வேண்டும். பெண்கள் அணியைப் பொறுத்தவரை கேப்டன் தர்ஷிகா, பவித்ரா ஜனனி, சுனிதா மற்றும் அன்ஷிதா என இவர்கள் நான்கு பேரும் ஜாக்குலினிடம் எதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் நான்கு பேரில் பவித்ரா ஜனனியும் அன்ஷிதாவும் ஜாக்குலின் அழுதபோது அழவேண்டாம் எனக் கூறினார்கள். ஆனால் ஜாக்குலின் அழுததைப் பார்த்த பின்னரும் கூட ஜாக்குலினைக் கடந்து சென்றார்கள். ஏன்? என்ன ஆச்சு என்று கூட கேட்கவில்லை.

bigg boss tamil season 8 bigg boss tamil sunita jacquline

பாத்ரூம் பஞ்சாயத்து: அதேபோல் பெண்கள் அணிக்குச் சென்றுள்ள முத்துக்குமரன் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூமைத்தான் பயன்படுத்தவேண்டும். அதேபோல் ஆண்கள் அணிக்குச் சென்றுள்ள பவித்ரா ஜனனி ஆண்கள் பயன்படுத்தும் பாத்ரூமைத்தான் பயன்படுத்த வேண்டும். இப்படியான நிலையில், பெண்கள் பாத்ரூமிற்குள் சென்ற முத்து, யாராவது இருக்கீங்களா எனக் கேட்டுக் கொண்டே பாத்ரூமைத் திறந்தார். உள்ளே இருந்து குரல் வந்ததும் பாத்ரூமை மூடிவிட்டார்.

bigg boss tamil season 8 bigg boss tamil sunita jacquline

புதிய விதிகள்: பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்க்கு சமைக்கத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளச்சொன்னார். இரு அணியினரும் தனித்தனியாக காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கினார்கள். இதில் ஆண்கள் அணியினர் உப்பு எடுக்க மறந்து விட்டனர்.

bigg boss tamil season 8 bigg boss tamil sunita jacquline

இதனால் பெண்கள் அணியினர் தங்களுக்கு உப்பு வழங்கினால், அவர்களின் காய்கறிகளை எடுத்துக் கொள்ள ஆண்கள் அணியினர் அனுமதி அளிப்பதாக கூறினர். முதலில் நாங்கள் உப்பு கொடுக்கவில்லை, காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் வேண்டாம் எனக் கூறிய பெண்கள், ஒரு கட்டத்தில் உப்பு கொடுக்க முடிவு செய்தனர்.

bigg boss tamil season 8 bigg boss tamil sunita jacquline

ஏற்கனவே ஆண்கள் அணியினரும் பெண்கள் அணியினரும் தங்கள் வீடுகளுக்குள் எதிரணியினர் செல்ல, ஒருமனதாக பேசி எடுத்திருந்த முடிவில் மாற்றங்கள் பெரிதும் இல்லாமல் பிக்பாஸ் ஓ.கே செய்து கொடுக்க, அந்த விதிகளும் இரண்டாவது நாளில் இருந்து நடைமுறைக்கு வந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X