Bigg Boss: ரவீந்தர் vs ரஞ்சித்! ஃபேட்மேனை பொளக்கப் போன கவுண்டம்பாளையம் ஹீரோ.. அடிதடி சண்டை நடக்குமோ?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து அதாவது அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டு இருக்கும் 18 நட்சத்திரங்கள் இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டனர். 24 மணிநேரத்தில் முதல் எவிக்‌ஷன் நடைபெற்றது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஒரு போட்டியாளரின் குணாதிசயம் தெரியாமலேயே அவரை வெளியேற்றியது என்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியின் மூன்றாவது நாளின் இரண்டாவது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

bigg boss tamil season 8 bigg boss promo

ஒரு நாளைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக மொத்தம் மூன்று ப்ரோமோக்களை விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது. அதாவது காலை 9 மணிக்கு ஒரு ப்ரோமோவும், நண்பகல் 12 மணிக்கு ஒரு ப்ரோமோவும், பிற்பகல் 3 மணிக்கு ஒரு ப்ரோமோவும் வெளியிட்டு வருகின்றது. இதன் மூலம் இன்றைய நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டி வருகின்றது. மேலும் இந்த ப்ரோமோக்களே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு எப்போதும் உள்ளது.

bigg boss tamil season 8 bigg boss promo

ப்ரோமோ: இந்நிலையில் மூன்றாவது நாளின் இரண்டாவது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், போட்டியாளர்கள் ஃபேட் மேன் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இருவருமே கை நீட்டியும் கையைத் தூக்கியும் பேசிக்கொள்கின்றார்கள். ஆனால் உடனே ரஞ்சித் ஃபேட் மேனை நோக்கி, 'கையை கீழ போடு. இது பிக் பாஸ், நீ இங்க பாஸ் கிடையாது. இந்த கைய் நீட்டுறது, கைய ஆட்டறது எல்லாம் எங்கிட்ட வெச்சுக்காத' எனக் கூறுகின்றார்.

bigg boss tamil season 8 bigg boss promo

அடிக்கப் பாய்ந்த ரஞ்சித்: அதேபோல் ஃபேட் மேன் ரவீந்தர் பேசுகையில், 'நீ கைய நீட்டி பேசறதுக்கு நான் ஒன்னும் உன்னோட வீட்டு வேலைக்காரன் கிடையாது. ஏய் என்ன பண்ணிடுவ நீ' என குரலை உயர்த்த ரஞ்சித் ஃபேட் மேனை அடிக்கப் பாய்வது போல் சக போட்டியாளர்களை தள்ளிவிட்டுவிட்டு ஃபேட் மேனை நோக்கி ஓடிவர முயற்சி செய்கின்றார். இதனைப் பார்க்கும்போது இருவருக்கும் இடையில் மிகவும் காரசாரமான சண்டை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. இந்தப் ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

bigg boss tamil season 8 bigg boss promo

சண்டை: மேலும் ரஞ்சித் தன்னைத் தடுத்த சக போட்டியாளர்களை கீழே தள்ளிவிட்டுவிட்டு ரவீந்தரை நோக்கிப் போகின்றார். இந்த சண்டை முழுவதும் கார்டன் ஏரியாவில் நடைபெற்றுள்ளது. ரஞ்சித்தும் ரவீந்தரும் செம கோபத்தில் உள்ளனர். இருவருக்கும் இடையில் ஈகோ கிளாஷ் ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

bigg boss tamil season 8 bigg boss promo

இருவருக்கும் இடையில் இந்தப் பிரச்னை தொடர்ந்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், ரவீந்தர் இந்த வார நாமினேசனில் உள்ளார். இந்த வார இறுதிக்குள் என்னவெல்லாம் நடக்குமோ என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X