ரஞ்சித்தை அந்த இடத்தில் பிடித்த தர்ஷா.. ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம்.. கடுப்பில் சக போட்டியாளர்கள்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது.இதில் இன்றைய எபிசோடில், தர்ஷா குப்தா ரஞ்சித்தை அந்த இடத்திலேயே பிடித்து அவரை வலியால் கதறவிட்டுள்ளார். இதனால், சக போட்டியாளர்கள் தர்ஷா குப்தா மீது செம கடுப்பில் இருக்கின்றனர்.
சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, சாச்சனா, அர்னவ், அக்ஷிதா, தன்ஷிகா, பவித்ரா ஜனனி என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், முதல் வாரத்தில் ரவீந்திரன் வெளியேறினார். அடுத்ததாக அர்னவ் வெளியேறிய நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

டெய்லி டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் டெய்லி டாஸ்க் இன்று ஒல்வர் காயின் எனும் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளில் இருந்து 7 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பெண்கள் அணியிலிருந்து அன்ஷிதாவும் ஆர்ஜே ஆனந்தியும் மேற்பார்வையாளர்களாக இருந்தனர் இந்தப் போட்டியில் பஸ்ஸர் அடிக்கும் போது கில்லர் காயின் வைத்திருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர் என்ற விதிமுறையுடன் 5 முறை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, இல்வர் காயின் வைத்திருக்கும் போட்டியாளர் அடுத்த அணியினர் மேல் இந்த காயினை ஒட்ட வைக்க வேண்டும் அப்படி செய்தால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார.
அந்த இடத்தில் மிதி: இப்படி நடந்த டாஸ்கில், ஆண்கள் அணிக்கு எதிராக பலத்தை காட்ட முடியாத தர்ஷா, ரஞ்சித்தை அந்த இடத்திலேயே மிதித்துள்ளார். முதல் முறை தர்ஷா அந்த இடத்தில் மிதித்த போதே, ரஞ்சித், தர்ஷாவிடம் அந்த இடத்தில் மிதிக்காத என்று சொல்லி இருக்கிறார். உடனே தர்ஷா ஓ அப்படியா என்று காலை எடுத்துவிட்டு, மீண்டும் அதே இடத்தில் அதாவது ரஞ்சித்தின் பிறப்பு உறுப்பில் மிதித்துள்ளார். அப்படியே மூன்று முறை மிதித்துள்ளார். இதனால், ரஞ்சித் வலி தாங்காமல், அந்த இடத்தில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து வலியால் புலம்பி வருகிறார். தர்ஷாவிடம் அந்த இடத்தில் மிதிக்காத என்று சொல்லியும் அந்த பெண் வேண்டும் என்றே அந்த இடத்தில் மிதித்தார் என்று ஆண் போட்டியாளர்களிடம் புலம்பி வருகிறார். இதனால் ஆண் போட்டியாளர்கள் தர்ஷா மீது செம கோபத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











