Bigg Boss 8: டபுள் எவிக்ஷனில் சிக்கிய ஆனந்தி, சாச்சனா.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 63 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்த வாரம் யாருமே எதிர்பாராத வகையில் டபுள் எவிக்ஷன் நடைபெற்றிருக்கிறது. இதில் சாச்சனா மற்றும் ஆர்.ஜே. ஆனந்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் அவர்கள் வாங்கிய சம்பளம் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக உள்ளது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொள்வதால் அவர்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருந்ததால், இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஹிந்தியில் பல சீசன்களைக் கடந்த, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் தற்போது எட்டாவது சீசனில் அடியெடுத்து வைத்து 63 நாட்களை கடந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 8: இதுவரை தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்த நிலையில், எட்டாவது சீசனை விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். கமல் அனைவரிடமும் அமைதியாக, ஆராய்ந்து பொறுமையாக பேசுவார். ஆனால் விஜய் சேதுபதியிடம் அந்த பொறுமை இல்லை என்றும், மற்றவர்களை அவர் பேசவிடவில்லை என்றும், மற்றவர்களுக்கு அவர் மரியாதை தருவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.
டபுள் எவிக்ஷன்: இந்த சீசனில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக வீட்டுக்குள் ஒரு கோடு போடப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் சுவாரஸ்யம் இல்லாததால் அந்த கோடு அகற்றப்பட்டு இப்போது வீடு ஒன்றாக இருக்கிறது. தற்போது நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை எட்டி இருக்கும் நிலையில், கடந்த வாரம் நாமினேஷனில் முத்துக்குமார், சௌந்தர்யா, ராணவ், ஜாக்லின், சத்யா, ரயான், பவித்ரா, மஞ்சரி, ரஞ்சித், தர்ஷிகா, சாச்சனா மற்றும் ஆனந்தி நாமினேஷனில் சிக்கினர். இதில் குறைந்த வாக்குகளை பெற்ற சாச்சனா மற்றும் ஆனந்தி ஆகியோர் யாருமே எதிர்பாராத வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.
ஆர்ஜே ஆனந்தி, சாச்சனா சம்பளம்: இந்நிலையில், தற்போது இவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஆர்.ஜே ஆனந்திக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக கூறப்படும் நிலையில் 63 நாட்கள் அவர் வீட்டில் இருந்ததற்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல மகாராஜா திரைப்படத்தில் நடித்த சாச்சனாவிற்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்பட்ட நிலையில் 63 நாட்கள் அவர் வீட்டில் இருந்ததற்கு 12 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.ஜே ஆனந்தி அனைவருக்கும் டஃப் கொடுத்து கடைசி வரை வீட்டில் இருப்பார். அவர் திறமையான போட்டியாளர் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். இதனால் வரும் வாரங்கள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











