Bigg Boss 8: இன்னும் தொடங்கவே இல்லை.. புது நாட்டாமை விஜய் சேதுபதியை வம்பிழுக்கும் வனிதா விஜயகுமார்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமாகும்போது பலரும் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து குரல் கொடுத்தனர். இது போன்ற நிகழ்ச்சிகளால் நமது காலாச்சாரம் சீரழிந்துவிடும், பண்பாடு புண்பட்டுவிடும் என கூறினார்கள். அனால் நாளடைவில் அவர்களில் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆகிப்போனார்கள். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சில் சமூகத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டது எனக் கூறும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகரித்துவிட்டனர். நாளை அதாவது அக்டோபர் 6 முதல் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கவுள்ளது. இந்த சீசனில் இருக்ககூடிய மிகப்பெரிய மாற்றம் மற்றும் எதிர்பார்ப்பு என்றால் அது விஜய் சேதுபதியாக இருக்கின்றார். இந்நிலையில் விஜய் டீவி தரப்பில் பிக் பாஸ் ரசிகர்களையும் இதற்கு முன்னர் பிக் பாஸில் பங்கேற்றவர்களையும் வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விக்கு முன்னாள் போட்டியாளர்கள் பதில் அளித்தனர். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் மிகவும் பிரமாதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அப்படி இருக்கையில், இந்த சீசனில் இருந்து அவரின் சொந்த காரணங்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படியான நிலையில் விஜய் சேதுபதிதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகின்றார் என்றதும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் குறித்து என்ன மாதிரியான மனநிலை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் ப்ரோமோக்களை விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது. மேலும் இந்நிகழ்ச்சி நாளை பிற்பகல் 4.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

bigg boss tamil season 8 bigg boss tamil vanitha vijayakumar

பிக் பாஸ் இதுவரை சின்னத்திரையிலும் சினிமாவிலும் தனக்கான இடத்தினை நிறுவ முயற்சிக்கின்றவர்களை போட்டியாளர்களாக வைத்து அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருந்து வந்துள்ளது. அதேநேரத்தில் சினிமாவில் இருக்ககூடிய மூத்த கலைஞர்களும் கூட இந்தப் போட்டியில் போட்டியாளர்களாக கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் அனைத்து வகையான வயதினைச் சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக களமிறக்கப்படுகின்றார்கள்.

கூல் சுரேஷ்: இந்நிலையில் விஜய் டிவி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள புரோமோவில், முதல் சீசனில் கலந்து கொண்ட ஆர்த்தி, பிக் பாஸ் ஒரு டாஸ்க் வைத்தார். அதன்படி கிச்சனில் இருந்த பொருட்களை எடுத்துவந்து ஒரு போட்டியாளர் மீது கொட்டினோம். ஆனால் அதன் பின்னர் எங்களுக்கு சமைக்க எந்த பொருட்களையும் பிக்பாஸ் கொடுக்கவில்லை எனக் கூறினார். ஏழாவது சீசனில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் பேசுகையில், “ கேப்டன் டாஸ்கில் யாரும் கலந்து கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். ஏனென்றால் அதில் வேலை அதிகம் என்பதால்தான்” எனக் கூறினார்.

வனிதா விஜயகுமார்: மேலும் அந்த ப்ரோமோவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குரேஷி வனிதா விஜயகுமாரை நோக்கி, கேம் என்றால் என்ன? ஸ்டேர்டஜி என்றால் என்ன எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு வனிதா விஜயகுமார், “ அதனை நாம் விஜய் சேதுபதியிடம்தான் கேட்கனும்” என பதில் அளித்தார். இவரது இந்த பதில் பலருக்கும் கொஞ்சம் ஜர்க்கை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏற்கனவே இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தினம் தோறும் வீடியோ பதிவிடுவேன் எனக் கூறிய வனிதா விஜயகுமார், விஜய் சேதுபதியிடம் தான் கேட்கனும் எனக் கூறியிருப்பது அவரை வம்பிழுக்க தயாராகிவிட்டாரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X