BB Rayan: மூன்று பெண்களோடு சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய ரயான்.. கமெண்ட் போட்ட முத்துக்குமரன்

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடக்கத்தில் பலருக்கும் சந்தேகம் இருந்தது, கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறாரே, எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி தனது தக் லைஃப் ஸ்டைலில் மொத்த பிக் பாஸையுமே அதிர வைத்துவிட்டார். கடந்த சீசனில் பலரது கவனத்தை ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவர் ரயான். இவர் தனது பிறந்தநாளை பிக் பாஸ் செலிபிரிட்டிகளான சௌந்தர்யா, பவித்ரா மற்றும் ஜாக்குலின் உடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசனாக மாறிப்போனது. வார இறுதியில் விஜய் சேதுபதி, வார நாட்களில் போட்டியாளர்களின் அட்ராசிட்டி, ஆண்கள் அணி பெண்கள் அணி என மொத்த வீடுமே முதல் நாளில் இருந்து பரபரப்பாக இருந்தது. முதல் நாளில் வீட்டுக்கு வெளியே படுத்த ஜாக்குலின் அந்த சீசனின் அனைத்து வாரங்களிலும் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டார். கடைசி வாரத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு வரவேண்டிய டாஸ்க்கில் சில நொடிகள் தாமதமாக டாஸ்க்கை முடித்ததால் ஜாக்குலின் வெளியேற்றப்பட்டார்.

அதேபோல் இந்த சீசனில் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர் என்றால் அது இரண்டாம் இடத்தை வென்ற சௌந்தர்யா. அதேபோல் போட்டியின் டாப் 4 வது போட்டியாளராக வந்தவர் பவித்ரா. பவித்ரா கடைசி வாரம் வரை இருப்பாரா என்று பல ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தார்கள். ஆனால் அவரது அமைதியான குணம், நிதானமான ஆட்டம், தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது என பல தேர்ந்த குணங்களால் பவித்ரா மக்கள் மனதை வென்றார். கடைசியாக ஒரு முயல் குட்டி கதையை படிக்கச் சொல்லி பவித்ரா வெளியேற்றப்பட்டார்.

Bigg Boss Tamil Season 8 Rayan Celebrates His Birthday With Soundarya Jaquline And Pavithra
Photo Credit:

ரயான்: 8 வது சீசனில், வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டுக்குள் சென்று, தன்னை தரமான போட்டியாளராக நிரூபித்தவர் ரயான். இன்னும் சொல்லப்போனால் டாஸ்க் பீஸ்ட் ரயான். எந்த டாஸ்க்காக இருந்தாலும் அதில் வெற்றி வாகை சூடி அசத்தியதால் ரயானுக்கு இந்த பெயர் வந்தது. ஃபேமிலி ரவுண்டில் வீட்டுக்குள் சென்ற ரயான்-இன் அக்கா, "நீ ஏன் டா எப்ப பார்த்தாலும் பொண்ணுங்க கூடவே இருக்க" என்று கேள்வியைக் கேட்டு குண்டைத் தூக்கிப் போட்டார். சில நாட்கள் மட்டும் அக்காவின் பேச்சைக் கேட்ட ரயான் அதன் பின்னர் மீண்டும் தனது தோழிகளுடன் பேசிக்கொண்டு, அவர்களோடே வீட்டில் வலம் வந்தார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்: இந்நிலையில் ரயான் தனது பிறந்தநாளை பிக் பாஸ் பிரபலங்களான சௌந்தர்யா, பவித்ரா மற்றும் ஜாக்குலின் உடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்கள். ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவுக்கு ஒரே நேரத்தில் கேக் ஊட்டி விடுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், " சார் இந்த பையன் இன்னும் மாறல சார்.. எப்பவும் பொண்ணுங்க கூட தான் இருப்பான் போல" என்று கமெண்ட் அடித்தும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியும் வருகிறார்கள். இந்த போஸ்ட்க்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வாழ்க என கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X