BB8: அந்த கேள்வியைக் கேட்ட சனம் ஷெட்டி.. சௌந்தர்யா ரானவ் பெயரை சொல்லும் ரசிகர்கள்! ஒருவேளை இருக்குமோ?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. இந்த வாரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால், இந்த வாரம் யாரெல்லாம் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் தீவிரமாக ஓடிக்கொண்டு உள்ளது. இதுமட்டும் இல்லாமல், இந்த வாரம் நடைபெற்று வரும், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் எழுப்பியுள்ள கேள்வி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

வழக்கமாக ஒரு சீசன் தொடங்கிவிட்டாலே, ஷனம் ஷெட்டி தொடர்ந்து அந்த சீசன் குறித்தும் போட்டியாளர்களின் ஆட்ட நேர்த்தி குறித்தும் தனது கருத்தினை தெரிவித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த சீசன் குறித்தும் போட்டியாளர்களின் ஆட்டம் குறித்தும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், தனது யூடியூப் சேனலில் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார்.

bigg boss tamil sanam shetty soundariya

போட்டி முடிய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளது. வீட்டில் மொத்தம் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இதில், சௌந்தர்யா, முத்துக்குமரன், அருண், தீபக், மஞ்சரி, ஜாக்குலின், பவித்ரா ஜனனி, ரானவ், ரயான் மற்றும் விஷால் என 10 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் மஞ்சரி, ரானவ் மற்றும் ரயான் ஆகியோர் வைல்ட் கார்டில் உள்ளே வந்த போட்டியாளர்கள் ஆவர். இந்த வாரம் எலிமினேஷனுக்கு மொத்தம் 8 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் நாமினேட் செய்யப்படாத போட்டியாளர்கள் என்றால் அது, சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் மட்டும்தான். மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

சனம் ஷெட்டி: இந்த வாரம் நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறும் போட்டியாளர் நிச்சயம் இறுதிவரை இருப்பார் என்பது விதி. எனவே, டிக்கெட் டூ ஃபினாலா டாஸ்கில் புள்ளிகளைப் பெற போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடிக்கொண்டு உள்ளனர். இப்படியான நிலையில் சனம் ஷெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சீசனில் பி.ஆர் மூலம் வாக்குகளை வாங்கி வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் யார் என்ற கேள்வியைக் கேட்டுள்ளார்.

bigg boss tamil sanam shetty soundariya

சௌந்தர்யா, ரானவ்: இவரது இந்தப் பதிவுக்கு கீழ், இணையவாசிகளும், பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் சௌந்தர்யா மற்றும் ரானவ் ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். சில முத்துக்குமரன் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான இணையவாசிகள் சௌந்தர்யா மற்றும் ரானவ் பெயரத்தான் கூறியுள்ளார்கள். ஏற்கனவே இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சௌந்தர்யா மற்றும் ரானவ் ஆகியோர், பி.ஆர் மூலம் பிக் பாஸ் போட்டியில் நீடித்துக்கொண்டு உள்ளார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

bigg boss tamil sanam shetty soundariya

அர்ச்சனா: கடந்த சீசனே, பி.ஆர் ஸ்டண்ட் மூலம்தான் அர்ச்சனா கோப்பையை தட்டிச் சென்றார் என்ற பேச்சு இப்போது வரை உள்ளது. அதிலும் குறிப்பாக, அர்ச்சனாவுக்கு ஆதரவாக, செயல்பட்ட பல்வேறு பி.ஆர் குழுக்கள், சக போட்டியாளர்களின் தனிப்பட்ட சமூக வலைதளப் பக்கங்களுக்கு மிரட்டல்கள் விடுத்தார்கள் என்றெல்லாம் இணையத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்கள் இருக்கின்றார்கள். இப்படி குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்களையும் அர்ச்சனா எதிர்கொண்டுதான் வருகின்றார்.

bigg boss tamil sanam shetty soundariya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X