Bigg Boss 8: ’ஈன்ற பொழுதின்’ டைட்டிலை வென்ற முத்துக்குமரன்.. ஆனந்தக் கண்ணீரில் ஆரத் தழுவிய அம்மா!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8இன் டைட்டிலை முத்துக்குமரன் வென்றுள்ளார். டைட்டிலுடன் அவர் ரூபாய் 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையையும் வென்றுள்ளார். சௌந்தர்யா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். விஷ்ணு மூன்றாவது இடம் பெற்றுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முத்துக்குமரன் டைட்டிலை வென்ற பின்னர், அவரது அம்மாவும் அப்பாவும் முத்துக்குமரனை ஆரத் தழுவி முத்தம் கொடுத்தனர். இதனைப் பார்த்த சக போட்டியாளர்கள் நெகிழ்ந்து போனார்கள். அவர் கோப்பையை வாங்கும்போது, அவரது பெற்றோர்கள் மேடையில் அவருக்கு அருகில் இருந்தார்கள்.

முத்துக்குமரன் டைட்டிலை வென்ற பின்னர், இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரும் சந்தோஷமடைந்தார்கள். அதில் குறிப்பாக, தீபக், மஞ்சரி, ஜாக்குலின், ரவீந்தரன், ஆனந்தி, சாச்சனா உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். முத்துக்குமரனை தூக்கிக் கொண்டாடினார்கள். முத்துக்குமரனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்கள் இணையத்தில் முத்துக்குமரன் பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.முத்துக்குமரன் இந்த சீசனின் டைட்டிலுக்கு தகுதியானவர் மட்டும் இல்லை பொருத்தமானவரும் கூட. பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடச் செல்வதற்கு முன்னர், அவர் தனது அம்மாவின் கரங்களில் இருந்து டம்மி டிராஃபியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். இப்போது கோடிக்கணக்கான இதயங்களில் இடம் பிடித்து, அவர்கள் மனதை வென்று, டைட்டிலையும் வென்று, தனது அம்மாவிடம் நிஜமான டிராஃபியைக் கொடுத்து அழகு பார்த்துள்ளார்.

முத்து: டைட்டில் வென்ற முத்துக்குமரன் பேசும்போது, " இந்தக் கோப்பை என்னுடையது மட்டும் இல்லை. எங்கள் 24 பேருடையதும் கூட. என்னால் வெல்லமுடியும் என்றால், அனைவராலும் வெல்ல முடியும். என்னைத் திட்டித் திருத்தி என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள் எனத் தெரிவித்தார். முத்துக்குமரனின் தாயாரும், தந்தையும் முத்து வெல்லக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.

டைட்டில்: விஜய் சேதுபதி, முத்துவிடம் கோப்பை மற்றும் ரூபாய் 40.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அதேபோல் இரண்டாம் இடம் பிடித்த சௌந்தர்யாவுக்கு வாழ்த்துகள் கூறினார். சக போட்டியாளர்கள் இருவருக்கும் வாழ்த்து கூறினர். தீபக் மற்றும் அருண் ஆகியோரை முத்துக்குமரன் தூக்கிக் கொண்டாடினர். தீபக் முத்துக் குமரனைத் தூக்கிக் கொண்டாடினார். மஞ்சரி கண் கலங்கிவிட்டார். கடந்த 7 சீசன்களுடன் ஒப்பிடுகையில் இந்த சீசன் தான் டாக்ஸிக் ஃப்ரீ சீசனாக இருந்துள்ளது. டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்கு வாழ்த்துகள்.

bigg boss tittle winner bigg boss 8 muthukumaran soundarya 8

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X