Bigg Boss 8: சௌந்தர்யா பிக் பாஸ் டைட்டில் வெல்ல தகுதியானவர்.. முத்துக்குமரன் என்ன இப்படி சொல்றாரு?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த 19ஆம் தேதி முடிவுக்கு வந்தது. மொத்தம் 106 நாட்கள் நடைபெற்ற இந்த சீசனின் டைட்டிலை முத்துக்குமரன் வென்றார். இவருக்கு டைட்டில் மற்றும் பரிசுத் தொகை ரூபாய் 40.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இது இல்லாமல், அவர் ஏற்கனவே நடைபெற்ற கேப்டன்களுக்கான டாஸ்க்கில் ராயல் என்ஃபீல்ட் பைக்கினையும் வென்றிருந்தார். இப்படி இருக்கும்போது, தற்போது முத்துக்குமரன் , கூறியுள்ள விவகாரம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தினை ஈர்த்துள்ளது.
இந்த சீசனில் மொத்தம் 24 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். முதல் சில வாரங்கள் ஆட்டம் அந்த அளவிற்கு ரசிக்கும் படியாக இல்லை. அதன் பின்னர் ஆட்டம் போகப்போக சூடு பிடிக்க ஆரம்பித்தது. இந்த சீசனில்தான் பெரிய அளவிற்கு க்ரூப் என்பது இல்லாமல், போட்டியாளர்கள் பெருமளவு தனித்தனியாக ஆட்டத்தினை விளையாடினார்கள். இது ரசிக்கும்படியாக இருந்தது. இது ஒரு புறம் இருக்க, போட்டியாளர்கள் தங்களுக்கான பி.ஆர். டீமினை ஏற்கனவே செட் செய்துவிட்டுச் சென்றிருந்ததால், இணையத்திற்குள் நுழைந்தாலே பிக் பாஸ் குறித்த வீடியோக்கள் வந்து குவிந்தது.

இந்த சீசனில் டாப் இரண்டு போட்டியாளர்களாக முத்துக்குமரனும், சௌந்தர்யாவும் இருந்தனர். இவர்கள் இருவரும்தான் டாப் 2 போட்டியாளர்களாக இருப்பார்கள் என ரசிகர்கள் ஏற்கனவே யூகித்து வைத்திருந்தனர். மேலும் முத்துக்குமரன் தான் டைட்டிலை வெல்லுவார் என ரசிகர்கள் கணித்து வைத்திருந்தனர். அதேபோல், முத்துக்குமரன் டைட்டிலை வென்றார்.
முத்துகுமரன்: இப்படியான நிலையில், முத்துக்குமரன் பிக் பாஸ் குழுவினருக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பகிர்ந்து கொண்டுள்ள விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, பிக் பாஸ் மேடையில் சௌந்தர்யாவுடன் நின்றபோது உங்களுக்கு என்ன தோன்றியது என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அதில், “ சௌந்தர்யா கையைத் தூக்கிவிடுவார்களோ என யோசித்தேன். நான் உழைத்தேன், கடுமையாக உழைத்தேன் எனக் கூறினாலும், பிக் பாஸ் என்பது, ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அங்கு எப்போதும் முறைத்த முகத்துடன் பேசிக்கொண்டு இருக்கும் ஒருவரை எந்த அளவிற்கு பிடிக்குமோ, அதே அளவிற்கு, மிகவும் ஜாலியாக, எது குறித்தும் கவலை கொள்ளாத சௌந்தர்யாவையும் மக்களுக்குப் பிடிக்கும்.
சௌந்தர்யா : இதுதானே இயல்பு. டாப் 8இல் இருந்த அனைவருமே டைட்டிலுக்குத் தகுதியானவர்கள்தான். அந்த 8 பேருக்கும் 8 தனித்துவம் உள்ளது. அப்படிப் பார்க்கும்போது, சௌந்தர்யாவின் கையைத் தூக்கியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதில் வருத்தப்படுவதற்கும் எதுவும் இல்லை. நானா? இல்லை சௌந்தர்யாவா? சௌந்தர்யா கையைத் தூக்கிவிடுவார்களோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. சௌந்தர்யாவின் ரசிகர்கள் இப்போதும் கூட இணையத்தில் பீபுள் வின்னர் சௌந்தர்யா என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











