Bigg Boss 8: பணப்பெட்டியை யார் எடுத்தால் என்ன?.. புல்லட் பைக்குடன் ₹50 லட்சத்தை தட்டித் தூக்கிய குமரன்

சென்னை: இணையத்தை திறந்தாலே பிக் பாஸ் தமிழ் சீசன் 8 குறித்த தகவல்கள் டன் கணக்கில் கொட்டுகின்றன. அதிலும் டைட்டிலைத் தட்டித்தூக்கியதாக கூறப்படும் முத்துக்குமரனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. வழக்கமாக ஒரு சீசன் முடியும்போது, போட்டியாளர்கள்தான், பாண்டவர் பூமி படத்தைப்போல, எமோஷனலாக கொண்டு செல்வார்கள், ஆனால் இந்த சீசனில் பிக் பாஸே எமோஷனலாகி விட்டார். அந்த அளவுக்கு இந்த சீசன் சிறப்பான சீசனாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், கோப்பையோடு பரிசுத்தொகை மற்றும் சம்பளம் என மொத்தம் எவ்வளவு வீட்டிற்கு எடுத்துச் செல்லப்போகின்றார் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நேரடிப் போட்டியாளர்கள், வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் போட்டியில் கலந்து கொண்டவர்கள் என இந்த சீசனில் மொத்தம், 24 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த 8வது சீசனை முதன் முதலாக தொகுத்து வழங்க கமிட் ஆனார் விஜய் சேதுபதி. முதல் சில வாரங்களில் ஆட்டம் சுமாராக இருக்க, வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே சென்ற பின்னர், வேற லெவலில் சூடு பிடித்தது.

bigg boss tamil muthukumaran bigg boss tittle winner

ஆட்டம் இறுதி வாரத்தை நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேலும் சில போட்டியாளர்கள் வெளியேறும்போது, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து எமோஷனலாகி விட்டார்கள். அதிலும் குறிப்பாக, மஞ்சரி, தீபக் வெளியேறும்போது மிகவும் வருத்தப்பட்டார்கள். மேலும் ஜாக்குலின் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியைத் தழுவி வெளியேறிய போது, அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஏராளம். 15 வாரங்கள் நாமினேஷன் செய்யப்பட்டு, 15 வாரங்களும் மக்களால் தொடர்ந்து போட்டியில் விளையாட வைக்கப்பட்ட, போட்டியாளர் ஜாக்குலின். அவர் வெளியேறியதால், மன உளைச்சலால், மருத்துவமனையில் ஒரு ரசிகை அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

bigg boss tamil muthukumaran bigg boss tittle winner

முத்துக்குமரன்: இந்த சீசனில்தான் பணப்பெட்டி டாஸ்க்கில் வித்தியாசமான முறை கையாளப்பட்டது. அதாவது, வீட்டிற்கு வெளியே உள்ள பணப்பெட்டியை, குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுக்கும் போட்டியாளர்கள், தொடர்ந்து போட்டியில் நீடிக்கலாம் என்பதுதான் அந்த விதி. அதன்படி, முத்துக்குமரன் ரூபாய் 50 ஆயிரம், ரயான் ரூபாய் 2 லட்சம், பவித்ரா ரூபாய் 2 லட்சம், விஷால் ரூபாய் 5 லட்சம் என மொத்தம் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போட்டியாளர்கள் ஏற்கனவே எடுத்துவிட்டனர்.

bigg boss tamil muthukumaran bigg boss tittle winner

பரிசுத் தொகை: இதனால், டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு மீதமுள்ள பரிசுத் தொகை ரூபாய், 40 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்படவுள்ளது. மேலும் ஏற்கனவே முத்துக்குமரன் ரூபாய் 50 ஆயிரத்தை பணப்பெட்டி டாஸ்க்கின் மூலம் எடுத்துள்ளார். இதனையும் சேர்த்தால் அவரது மொத்த பரிசுத் தொகை ரூபாய் 41 லட்சங்கள் ஆகும்.

bigg boss tamil muthukumaran bigg boss tittle winner

51 லட்சங்கள்: இது இல்லாமல், முத்துக்குமரனுக்கு பிக் பாஸில் ஒரு நாள் சம்பளம், ரூபாய் 10 ஆயிரங்கள், இதன் மூலம் மொத்தம் 106 நாளுக்கு அவரது சம்பளம், பத்து லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். இதனையும் சேர்த்தால் பிக் பாஸ் டைட்டில் கோப்பையுடன், ரூபாய் 51 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வீட்டுக்குச் செல்லவுள்ளார். மேலும், ஏற்கனவே நடைபெற்ற A23 ரம்மி டாஸ்க்கில், இவர் ராயல் என்ஃபீல்ட் பைக்கினை வென்றுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டில், பரிசுத் தொகை, ராயல் என்ஃபீல்ட் பைக் வென்ற முத்துக்குமரனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X