Muthukumaran: பிக் பாஸ் டைட்டிலை தட்டித் தூக்கப்போகும் முத்துக்குமரன்? அதிர்ச்சியில் சௌந்தர்யா ஆர்மி

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி வாரத்தினை எட்டிவிட்டது. இன்னும் சில தினங்களில் யார் வெற்றியாளர் என்பது தெரிவந்துவிடும். மொத்தம் 24 போட்டியாளர்கள் விளையாடி அதில், தற்போது 16வது வாரத்தில் ஆட்டம் உள்ளது. கடைசி வாரமான இந்த வாரத்தில் மொத்தம் டாப் 6 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளார்கள். இந்த வாரத்தில் மிட் வீக் எவிக்‌ஷனில் ஜாக்குலின் வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருக்கின்றது.

தமிழ் பிக் பாஸில் இதற்கு முன்னர் நடைபெற்ற 7 சீசன்களை விடவும் இந்த சீசன் கொஞ்சம் மாறுபட்ட சீசன் என்றே கூறலாம். காரணம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலகிக் கொள்ள, அதன் பின்னர், விஜய் சேதுபதி இந்த சீசனைத் தொகுத்து வழங்க கமிட் ஆனார். விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது, குறித்து ரசிகர்களுக்கு பல்வேறு கருத்துகள் எழுந்தது. ரசிகர்களில் ஒரு பிரிவினர் பாராட்ட, ஒரு பிரிவினர் கடுமையாக விமர்சித்தனர்.

muthukumaran soundarya nanjundan bigg boss tittle winner

போட்டியாளர்களும், முதல் நாளில் இருந்தே மிகவும் அமைதியாக டாஸ்க்குகள் மட்டும் விளையாடிக்கொண்டு இருந்தனர். தங்களது செயல்பாடுகள் மீது யாராவது விமர்சனம் வைத்தால் கூட, சேஃப் கேம் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். இதனால் ஆட்டத்தில் பெரிய சுவாரஸ்யமே இல்லாமல் போனது. இது தொடர்பாக விஜய் சேதுபதி, பிக் பாஸ் மாறி மாறிக் கூறினாலும், போட்டியாளர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. 4 வாரங்களுக்குப் பின்னர் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் 6 போட்டியாளர்கள் உள்ளே சென்ற பின்னர்தான், ஆட்டத்தில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.

muthukumaran soundarya nanjundan bigg boss tittle winner

முத்துக்குமரன்: ஆனால் அந்த முதல் நான்கு வாரத்திலும் முத்துக்குமரன் ஹவுஸ் மேட்ஸ் இடம் மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் ஸ்கோர் செய்திருந்தார். வார இறுதியில் எந்த கேள்வி கேட்டாலும் யார் பதில் சொன்னாலும் அதில் முத்துக்குமரனின் பெயர் இடம் பெற்றது. அதேபோல் பொதுவான கேள்விகளுக்கு முத்துக்குமரனின் பதில்கள் அப்லாஸ்களை அள்ளியது. இதனால் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் முத்துக்குமரனுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருந்தது.

muthukumaran soundarya nanjundan bigg boss tittle winner

சௌந்தர்யா: பல இக்கட்டான சூழலிலும் கூட முத்துக்குமரன், தெளிவான முடிவுகளை எடுத்தது தொடங்கி, யாராவது சிக்கலில் இருந்தால் கூட நியாயத்தின் பக்கம் நின்று, தவறு செய்தவர்களிடம், அவர்கள் செய்தது தவறு என உணர்த்தியது வரை முத்துக்குமரன் மக்கள் மனதை வென்றுள்ளார். வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்த பின்னர், மக்கள் மத்தியில் முத்துக்குமரனுக்கும் சௌந்தர்யாவுக்கும்தான் அதிக ஆதரவு இருப்பதாக கூறி வருகின்றார்கள். ஆனாலும் யாருமே (அன்ஷிதா தவிர) முத்துக்குமரனை அட்டாக் செய்யும் தொணியில் பேசவில்லை. ஆனால் சௌந்தர்யாவை தாளித்து எடுத்தார்கள்.

muthukumaran soundarya nanjundan bigg boss tittle winner

டைட்டில் வின்னர்: இப்படியான நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தான் என அவரது ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க, இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தும் வருகின்றனர்.

muthukumaran soundarya nanjundan bigg boss tittle winner

மேலும் இதுவரை மக்கள் செலுத்தியுள்ள வாக்குகளில் முத்துக்குமரன் தான் முதலிடத்தில் உள்ளார் என்றும், சௌந்தர்யா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது மிகவும் அதிகம் என விஜய் டிவிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தரப்பில் செய்திகள் உலா வருகின்றது. இது முத்துக்குமரன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் தகவல் சௌந்தர்யா ஆர்மிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

muthukumaran soundarya nanjundan bigg boss tittle winner

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X