கேள்வினா இப்படி இருக்கனும்.. எல்லாருமே திணறிட்டாங்க..விஜய் சேதுபதி பற்றி வனிதா சொன்னதை பாருங்க!

சென்னை: அனைவரும் மிகவும் எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக கடந்த வாரம் தொடங்கியது. அன்றைய தினம் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம். அவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பாக கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அதே போல சனிக்கிழமையான நேற்று விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையும் நைசாக தட்டிக்கொடுத்து கேள்வி கேட்காமல் முகத்திற்கு நேராக பேசியதை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வரும் வனிதாவும் கேள்வினா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதியை புகழ்ந்துள்ளார்.

bigg boss tamil bb 8 vanitha

பிக் பாஸ் சீசன் 8: இதில், சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, சாச்சனா, அர்னவ், அக்ஷிதா, தன்ஷிகா, பவித்ரா ஜனனி என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இதில் சாச்சிதா முதல் நாளே வெளியேறிய நிலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து களமிறங்கி உள்ளார்.

விளாசிய விஜய் சேதுபதி: நேற்றைய எபிசோடை விஜய் சேதுபதி ஆரம்பிக்கும் போதே, வீட்டிற்குள் போகும் போது, சிறப்பாக விளையாடுவோம் அப்படி இப்படி என்று சொல்லிக்கொண்டு போனார்கள் ஆனால், வீட்டுக்குள்ள கேம் விளையாடாமல், கொத்தமல்லி கட்டைக் காணவில்லை, உப்பு தரியா, மசாலா பொடி தரியானு சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எதற்கு போனார்கள் என்று காட்டமாக பேசி நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

கொண்டாடும் ரசிகர்கள்: அதே போல, ஒன்மேன் ஷோ போல வீட்டிற்குள் இருக்கும் ஜாக்குலினை முகத்திற்கு நேராகவே ஏன் சண்டை போடுறீங்க என்று கேட்டுவிட்டார். பின் அதோடுவிடாமல், தர்ஷா குப்தா, ஜாக்குலின் நீங்க மற்றவர்கள் உங்களிடம் பேசும் போது காது கொடுத்து கேளுங்கள், இவர்களை வெறுப்பு ஏற்றுவது போல செயல்களை செய்ய வேண்டாம் என்றார். விஜய் சேதுபதி பேசுவதை இணையத்தில் பெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர்.

வனிதா, விஜய் சேதுபதி: அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் வனிதா விஜயகுமார், விஜய் சேதுபதி ஆரம்பிக்கும் போதே, இல்லத்திற்குள் செல்லத்தை பார்க்கலாமா என்று சொன்னது ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் அது கமல் சாரையும் நியாபகப்படுத்தியது. மக்கள் என்னென்ன கேள்வியை கேட்க வேண்டும் என்று நினைத்தார்களோ அந்த அத்தனை கேள்வியையும் விஜய் சேதுபதி கேட்டுவிட்டார். இதனால், போட்டியாளர்கள் அனைவரும் வாயடைத்துப்போய் பயத்தில் இருக்கிறார்கள்.

கேள்வினா அது இதுதான்: ஒவ்வொரு போட்டியாளரிடமும் முகத்திற்கு நேராக அவர் கேள்வி கேட்டவிதம் ரொம்ப நல்லா இருந்தது. யாரும் அதை எதிர்பார்க்கவே இல்லை. குறிப்பாக ஜாக்குலினிடம் விஜய்சேதுபதி பேசும் போது, அவரின் முகம் மாறியது. அதை கவனித்த அவர், ஜாக்குலின் நீங்க சொல்வது எனக்கு புரியல, எனக்கு புரியவில்லை என்றால் மக்களுக்கும் புரியாது, நீங்க ஒரு ஆங்கர் தானே புரியவில்லை என்றால் புரியும் படி சொல்லுங்க என்று முகத்திற்கு நேராக சொன்னது அட்டகாசமாக இருந்தது. கேள்வி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என் வனிதா விஜய் சேதுபதி வெகுவாக புகழ்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X