Bigg Boss: விஜய் சேதுபதி டீலிங்கே வேற லெவல்.. நோஸ்கட் ஆன போட்டியாளர்கள்.. பத்திக்கிட்ட பிக்பாஸ் வீடு!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கி சரியாக நேற்றோடு அதாவது அக்டோபர் 12ஆம் தேதியோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆண் போட்டியாளர்கள் 9 பேர் பெண் போட்டியாளர்கள் 9 பேர் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் நாளிலேயே போட்டியாளர் சாச்சனா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. மேலும் எதிர்ப்பு கிளம்பவே, அவர் மீண்டும் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது ரசிகர்கள் தரப்பில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் போட்டி தொடங்கி நேற்றுடன் ஒரு வாரம் ஆகின்றது. அதேப்போல் நேற்று சனிக்கிழமை என்பதால் தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் போட்டியாளர்களிடம் எவ்வாறு பேசினார் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8

நேற்றைய எபிசோடின் தொடக்கத்திலேயே விஜய் சேதுபதி பேசும்போது, போட்டியாளர்கள் மீது செம கோவமாகவும் அப்செட்டாகவும் இருந்தது தெரிந்தது. குறிப்பாக, வீட்டுக்குள்ள போய் கேம் விளையாடச் சொன்னா, கொத்தமல்லி கட்டைக் காணவில்லை என சண்டை போட்டுக்கொண்டு உள்ளார்கள். இவர்கள் எல்லாம் எதற்கு போனார்கள் என்றே தெரியவில்லை. டூர் போகும் மனநிலையில்தான் அனைவரும் உள்ளனர் என காட்டமாக ரசிகர்களை நோக்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8

விஜய் சேதுபதி நேற்று பேசுகையில் அனைத்து போட்டியாளர்களையும் கடுஞ்சொற்களால் திட்டாத குறை என்றுதான் கூறவேண்டும். முதல் வார அனுபவம் குறித்து போட்டியாளர்களை நோக்கி கேட்க, எங்கிருந்து தொடங்கலாம் என விஜய் சேதுபதி கேட்டார். அதற்கு சுனிதா தனக்கு நேர் எதிராக அமர்ந்திருந்த ஃபேட் மேன் ரவீந்திரனில் இருந்து தொடங்கலாம் எனக் கூற, உடனே விஜய் சேதுபதி, அதனை எப்படி நீங்கள் கூறுவீர்கள். நான் தான் இங்க ஹோஸ்ட்... சுனிதா நீங்களே ஆரம்பியுங்கள் என்றார்.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8

ஜாக்குலின்: அதன் பின்னர் அனைவரும் ரொம்ப கம்ஃபர்ட்டா இருக்கோம் எனக் கூற, விஜய் சேதுபதி ஏற்கனவே இருந்த கோபத்தை இறக்கி வைத்தார். ஹோஸ்ட்ட நம்பி இல்லை ஷோ, கண்டஸ்டன்ஸ நம்பித்தான் இருக்குது எனக் கூறினார். அதன் பின்னர் கடந்த வாரத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விவாதித்தார்.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8

அப்போது தர்ஷா குப்தா குரூப்பிசமாக இருக்கின்றார்களோ எனத் தோன்றுகின்றது சார் எனக் கூறியதும் நீங்க உட்காரலாம் எனக் கூறினார். அதேபோல் போட்டியாளர் ஜாக்குலினிடம் பேசும்போது மிகவும் கோபமாகவே பேசினார். என்னிடம் எல்லாரும் வெறுப்பாக பேசினார்கள் என ஜாக்குலின் கூற, நீங்கள் மட்டும் ரொம்ப அன்பா பேசீட்டிங்களாமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து ஜாக்குலினை அட்டாக் மோடிலேயே ஹேண்டில் செய்தார்.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8

ஃபேட் மேன் & முத்து: அதேபோல் ஃபேட் மேன் ரவீந்தரிடம் பேசும்போது நீங்கள் வீட்டிற்குள் சென்றும் விமர்சகராகவே இருக்கின்றீர்களே எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அவர் செய்த பிராங்க் குறித்து பேசும்போது அனைவரும் அவருக்கு எதிராகவே பேசினார்கள்.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு விஜய் சேதுபதி ஃபேட் மேனுக்கு ஆதரவாக நடந்த விஷயத்தைக் கூற ஃபேட்மேன் அழுதுவிட்டார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஷாக்காகிவிட்டார்கள். அதேபோல் போட்டியாளர் முத்துக்குமரனிடம் பேசுகையில், அவரவர் நேர்மை அவரவருக்குத்தான் தெரியும் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த முத்துக்குமார் முகம் மாறிவிட்டது.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8

ஜெஃப்ரி: போட்டியாளர் ஜெஃப்ரிக்கு எப்படி பேசவேண்டும் என சொல்லிக் கொடுத்தார். அதேபோல் ஆண்களா பெண்களா என்ற விவாதம் நடைபெற்றபோது அவரது நடவடிக்கை அவர் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்துப் பேசி இனிமேல் அவ்வாறு நடந்துகொள்ளக்கூடாது எனக் கூறினார். மொத்தத்தில் நேற்றய தினம் போட்டியாளர்கள் அனைவருக்கும் தனது ஸ்டைலில் விஜய் சேதுபதி ஒரு ரெய்டு விட்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi 8

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X