Bigg Boss: 40 நாள் ரீல்ஸ் செய்ததற்கு திவாகருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? அள்ளிக் கொடுத்த பிக்பாஸ்!

சென்னை: ஒரு வழியாக பெரும்பான்மையான பிக்பாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த ஒரு எலிமினேஷன் நடைபெற்று விட்டது. பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் ரசிகர்களை டார்ச்சர் செய்த போட்டியாளர்களில் ஒருவர் திவாகர், அதாவது தர்பூசணி நட்சத்திரம் திவாகர். அவர் 6 வார கடைசியில் 40 நாட்கள் முடிவில் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 40 நாட்கள் இருந்துள்ள அவருக்கு பிக்பாஸ் தரப்பில் இருந்து எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த சீசனில் முதல் நபராக அதாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் தர்பூசணி திவாகர். இவர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து பிரபலமானவர். இந்த சீசனில் களமிறக்கப்பட்ட சில போட்டியாளர்கள் மீது ரசிகர்களுக்கு விமர்சனங்கள் இருந்தது. அதில் ஒரு போட்டியாளர் திவாகர்.

Bigg Boss Tamil Season 9 Contestant Watermelon Diwakar Got Salary in Lakhs After His Eviction

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்வியல் படிப்பினைகளை மற்றவர்கள் வாழ்க்கையில் இருந்து அதாவது மற்றவர்களின் பேச்சு, நடவடிக்கை, சிந்தனை, செயல்பாடுகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். இந்த பிக்பாஸ் பல முன் மாதிரிகளை அடையாளம் காட்டியுள்ளது. பலர் தங்களை வேண்டா மாதிரிகளாகவும் முன்னிறுத்திக் கொண்டதும் உண்டு. அந்த வகையில் தர்பூசணி நட்சத்திரம் எந்த வகை என்பது ரசிகர்களின் தேர்வுக்கு விட்டுவிடுகிறேன்.

கையாள்: சரி, இந்த 40 நாட்களில் தர்பூசணி திவாகர் எப்போதும் பார்வதி சொல்லும் சொல்லுக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருப்பவராகவே இருந்துள்ளார். அவர் வெளிப்படையாக பேசி இருந்தாலும் அதில் பார்வதியின் உள்ளீடு இல்லாமல் பெரும்பாலும் இருந்தது இல்லை. இவரை பார்வதியின் கையாள், அடியாள், அல்லது சினிமா வசனங்களில் வரக்கூடிய வேறு சில சொற்களைக் கூட சொல்லலாம். அதற்கு அவர் பொருத்தமானவராக தான் இருந்துள்ளார். கடந்த 40 நாட்களில் ரீல்ஸ் செய்யும் போதும், பாட்டில் டாஸ்க்கின் போது க்யூ.சி-யாக இருந்த போது மட்டுமே அவர் தனித்து தெரிந்துள்ளார்.

Bigg Boss Tamil Season 9 Contestant Watermelon Diwakar Got Salary in Lakhs After His Eviction

ரீல்ஸ்க்கு சம்பளம்: கானா வினோத்துடன் இவர் இணைந்து பேசியது ஒரு கட்டம் வரை நன்றாக இருந்தது. எதற்கு எடுத்தாலும் தகுதி, தராதரம், ரேஞ்ச் என்று பூமர் மாதிரி பேசிக் கொண்டு இருந்தவர். சக பெண் போட்டியாளர்களிடம் லவ் கண்டெண்ட்க்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருந்தார். மற்றபடி அவரது 40 நாட்கள் ஆட்டத்தில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஒரு நாளைக்கு பிக்பாஸ் தரப்பில் இருந்து இவருக்கு ரூபாய் 12 ஆயிரம் சம்பளமாக கொடுப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு 40 நாளில் மொத்தம் ரூபாய் 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் 40 நாட்கள் ரீல்ஸ் செய்ததற்கு 5 லட்சம் சம்பளமா என்று கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X