Kemi Salary: “அன் பேர் கேம்“ கெமி நல்ல பிளேயர்.. ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்.. கெமி வாங்கிய சம்பளம்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிகள் இருந்து கெமி வெளியேறி உள்ளது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீசனில் கெமி ஒரு நல்ல போட்டியாளராக இருந்தார். கேம் டாஸ்காக இருந்தாலும் மற்ற எந்த டாஸ்காக இருந்தாலும் சிறப்பாக செயல்பட்ட கெமி வெளியேறி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கும் கெமி வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் மிகவும் மந்தமாக சென்றது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்த FJ சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அவருடைய பேச்சை யாரும் கேட்கவில்லை என்பதுதான் உண்மை. அதே போல, பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் இல்லை. ஆனால், வார கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விஜய் சேதுபதி, ஒவ்வொரு போட்டியாளரையும் அடுத்தடுத்த கேள்விகளால் வறுத்து எடுத்தார்.

பிக் பாஸ் கெமி: குறிப்பாக வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வந்த திவ்யா, சாண்ட்ரா, பிரஜன் மூன்று பேரை மாறி மாறி கேள்விகளை கேட்டார். சாண்ட்ரா சரியாக வேலை செய்யவில்லை. பிக் பாஸ் வேலையை செய்ய பலமுறை அறிவுறுத்தியபோதும் சாண்ட்ரா, திவ்யா இருவரும் ஏனோதானோ என வேலை செய்ததால், அவர்களை சரமாரியான கேள்வி கேட்டார். பிக் பாஸ் சொல்வதே கேட்பதற்காகத்தான் இந்த வீட்டிற்கு வந்து இருக்கின்றீர்கள், அதுதான் உங்களுடைய வேலை என விஜய் சேதுபதி விளாசினார்.
கடுப்பான விஜய் சேதுபதி: அதேபோல, FJ திவ்யாவிற்கு பால் கொடுக்கவில்லை என்பதற்காக பிரஜன் கடுமையான வார்த்தைகளால் பேசி இருந்தார். அதுமட்டுமில்லாமல் பல இடத்தில் வரம்பு மீறி பேசி இருந்தார். பிரஜன், அதை ஒரு லிஸ்ட் போட்டு எடுத்து வந்து மேடையில் ஒவ்வொன்றாக படித்துக் காட்டி பிரஜனை திக்கு முக்காட வைத்து விட்டார் விஜய் சேதுபதி. இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரஜன் வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கெமி வெளியேறி உள்ளார். கெமி உண்மையிலேயே ஒரு நல்ல போட்டியாளர், எந்த டாஸ்க கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்யக்கூடியவர். அதேபோல சக போட்டியாளர்கள் வீட்டில் தவறாக நடந்து கொண்டால், அதை துணிந்து கண்டித்தும் இருக்கிறார். வீட்டுக்குள் எதுவுமே செய்யாமல் பல மங்குனிகள் இருக்கும் போது, கெமியை வெளியேறிது அன் பேர் கேம் இணையத்தில் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கெமி சம்பளம்: 'குக் வித் கோமாளி' புகழ் பெற்றவர் கெமி, இவர் முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், தனது வாழ்க்கை மாறும் என்ற எண்ணத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டில் 50நாட்கள் இருந்துள்ளார். கெமிக்கு ஒரு நாளைக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர், பிக் பாஸ் வீட்டில் 50 நாட்கள் இருந்ததற்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











