Bigg Boss season 9: பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் எப்போது தெரியுமா? வேலையை தொடங்கிய விஜய் டிவி!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்த ரியாலிட்டி ஷோவாக உள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 8 சீசன்களை கடந்திருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் 9வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி அவர்களே தொகுத்து வழங்க நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சி எப்போதுமே புதிது புதிதாக ரியாலிட்டி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தும் அந்த வகையில், ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது அதுதான் பிக் பாஸ். திரையில் பார்த்து நாம் வியந்த பிரபலங்கள் அனைவரும் நூறு நாட்கள் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிகழ்ச்சியின் விதி. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இருப்பதற்காக சில டாஸ்கள் கொடுக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் பிடித்த போட்டியாளரை ஓட்டு போட்டு காப்பாற்றலாம் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

பிக் பாஸ் சீசன் 8: இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல சேனல்களில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது. இதில்,தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை எட்டு சீசன்களை கடந்துள்ளது. இதில்,ஏழு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். எட்டாவது சீசனில், தனக்கு இருக்கும் பணிச்சுமை காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து எட்டாவது சீசனை சரத்குமார், சூரியா, சிம்பு என யார் தொகுத்து வழங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில், விஜய்சேதுபதி இதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், விஜய் சேதுபதி யாருக்கும் ஆதரவாக இல்லாமல், எதையும் சுற்றி வளைத்து பேசாமல் தவறு என்று பட்டதை முகத்திற்கு நேராக அடித்து பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அது மட்டுமில்லாமல் அடுத்த சீசனுக்கும் நான் தொகுப்பாளர் என்றார்.
விரைவில் பிக் பாஸ் 9: எட்டாவது சீசனில் சஞ்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெஃப்ரி, அன்ஷிதா, அர்னவ், ராணவ், மஞ்சரி, ஜாக்குலின், ராயன், பவித்ரா, விஷால், சௌந்தர்யா, முத்துக்குமார், ரவிந்திரன் என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், முத்துக்குமாரன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும், விஷால், பவித்ரா ரெண்டு மூன்று இடங்களை பிடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால், அடுத்து பிக் பாஸ் சீசன் 9 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை சேனல் நிர்வாகம் செய்து வருகிறது. 9வது சீசனையிம் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார். பிக் பாஸ் 9வது சீசன் எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே ஏற்படுத்தியிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 9 செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் அல்லது அக்டோபர் மாதம் முதல் பகுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











