BB Promo: பார்வதி செய்த மோசமான செயல்! கமருதீனை கெட்டவார்த்தை பேசிய விக்கல்ஸ்.. அடிக்கப் பாய்ந்த சபரி

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகளில் விறுவிறுப்பாக உள்ளது. இந்த மொத்த ஆட்டத்தையும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக்பாஸ் குழுவினர் நடத்தும் போட்டிகள் ரசிக்கும்படியாக உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் 9 பேரையும் ஒரு காருக்குள் அமரவைத்து, அந்த காரில் இருந்து வெளியேறும் முதல் நபருக்கு ஒரு மதிப்பெண், கடைசியாக வெளியேறும் நபருக்கு 9 மதிப்பெண் என போட்டி நடத்தப்பட்டது. இதில் சக போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை வெளியேற்ற எடுக்கும் முயற்சிகள் எல்லை மீறி, மிகவும் மோசமான கட்டத்தை அடைந்தது, பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோவில், அனைவரும் ஒரே காருக்குள் இருக்கிறார்கள். அப்போது விக்கல்ஸ் விக்ரம், பார்வதி மற்றும் கமருதீனை நோக்கி இந்த டாஸ்கிலும் ரொமான்ஸ் செய்பவராக நீங்கள் இருக்கிறீர்களே என்று கூறுகிறார். அதற்கு பார்வதி, ஏதோ நாங்கள் இங்கு ரொமான்ஸ் செய்து சர்வைவ் செய்து கொள்கிறோம் என்று கூறுகிறார். அடுத்ததாக கமருதீன், சான்ட்ராவை நோக்கி, ஸ்கேம்ன்ட்ரா என்கிறார். இந்த பிரச்னைகள் முதல் ப்ரோமோவில் இருந்தது.

Bigg Boss Tamil Season 9 Ticket To Finale Task Fight Between Kamarudin Vikkals Vikram and Sabari
Photo Credit:

பரபரக்கும் பிக்பாஸ்: ஆனால் இரண்டாவது ப்ரோவைப் பார்க்கும்போது, காருக்குள் இருந்து கானா வினோத், விக்கல்ஸ் விக்ரம், சபரி, சான்ட்ரா என நான்கு பேர் வெளியேறிவிட்டார்கள். இதனால் காருக்குள் பார்வதி, கமருதீன் பின் இருக்கையிலும், அரோரா, திவ்யா மற்றும் சுபிக்‌ஷா முன் இருக்கையிலும் அமர்ந்துள்ளனர். இதில் பார்வதி திவ்யாவின் மீது காலைத் தூக்கிப் போடுவது போல செய்கிறார். மேலும் வெளியேறிய விக்ரம் மற்றும் சபரி என இருவரும் கமருதீனை நோக்கி கடுமையான வார்த்தைகளை வீசுகிறார்கள். குறிப்பாக இந்த சீசன் முழுவதும் எந்த விதமான கெட்ட வார்த்தையும் பேசாத விக்ரம், கமருதீனை நோக்கி மிகவும் காட்டமாக கெட்டவார்த்தைகளை வீசுகிறார்.

கெட்ட வார்த்தைகள்: உடனே கமருதீன் அப்படி எல்லாம் பேசாதே என்கிறார். ஆனால் விக்கல்ஸ் விக்ரமோ, எனக்கு வேண்டாம் டா இந்த கேம், நீ வெளிய வாடா என்று கத்துகிறார். அதேபோல் சபரியும் மிகவும் மோசமான வார்த்தைகளை வீசுகிறார்கள். இந்த ஆட்டத்திற்காக சான்ட்ராவை கீழே தள்ளிய பாரு, இன்னும் பத்து பேரை கீழே தள்ளுவா என்றும் அரோரா நீ இறங்காதடி" என்றும் கூறுகிறார். முதல் ப்ரோமோவே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது ப்ரோமோ அதற்கு மேல் மேலும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் கமருதீனை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அவர் இந்த ஆட்டத்தில் சக போட்டியாளர்களை மிகவும் கேவலமாக அணுகியது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

Bigg Boss Tamil Season 9 Ticket To Finale Task Fight Between Kamarudin Vikkals Vikram and Sabari
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X