காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயார்.. ஆனால் அது பார்வதியிடம் நடக்காது.. சபரி சொன்ன அந்த வார்த்தை

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த இரண்டு வாரங்களாக ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைமெண்ட் கொடுத்துக் கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போது இந்த வாரம் வீட்டுத் தல போட்டியில் கலந்து கொண்டு விளையாடியபோது சபரி மற்றும் பார்வதிக்கு இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் பார்வதியின் இடது கண்ணுக்கு அருகில் அடி பட்டதால்,பெரிய அளவில் அவரது கண் வீங்கிப் போனது. இப்படி இருக்கும்போது, தனது கண்ணில் அடிபட்டது தொடர்பாக பார்வதி அவரது அம்மாவிடம் தனது எண்ணங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட சபரி, பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

திங்கட்கிழமை எபிசோடில் நடைபெற்ற வீட்டுத் தல டாஸ்க்கின் போது, பார்வதி மற்றும் சபரிக்கு இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் பார்வதியின் வலது கண்ணுக்கு அருகில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவர்களும் பார்வதிக்கு சிகிச்சை அளித்தார்கள். பார்வதிக்கு அடிப்பட்ட கண்ணுக்கு அருகில் பெரிய அளவில் வீங்கிவிட்டது. இப்படி இருக்கையில், காயத்தினால் அவர் மிகவும் மனமுடைந்து அழுது கொண்டு இருந்தார்.

Bigg Boss Tamil Season 9 Sabari Ask Apologies To VJ Parvathy Mother Video Creates Attention On Social
Photo Credit:

இப்படி இருக்கும்போது காயம் பட்ட இடத்தில் காயம் சரி ஆகி வருவதால் கண்ணைச் சுற்றி கருப்பு நிறத்தில் மாறி வருகிறது. இப்படி இருக்கும்போது, பார்வதி தனது காயம் குறித்தும் அந்த காயத்தால் அவர் எப்படி உணர்கிறார் என்பது குறித்தும் ஒரு கேமராவுக்கு முன் நின்று கொண்டு, அவரது அம்மாவுக்கு தனது மனநிலையை விளக்கிக் கொண்டிருக்கிறார்.

நம்பிக்கை கொடுத்த பார்வதி: பார்வதி அப்போது, " அம்மா எனக்கு அடிப்பட்டுள்ளதை பார்த்து பயந்து விட வேண்டாம். எனக்குமே இந்த அடி, உதை, மிதி எல்லாம் புதிதாகத்தான் உள்ளது. முதலில் எல்லாம் இப்படியான விஷயங்கள் என்றால், பின் வாங்கிவிடுவேன். ஆனால் இப்போது அப்படி இல்லை, இதையும் எதிர் கொள்ளலாம் என்ற எண்ணமும் நம்பிக்கையும் எனக்குள் வந்துவிட்டது. இந்த காயம் சரி ஆகிவிடும். எப்படி இருந்தாலும் நான் அழகாகத்தான் இருப்பேன்" என்று கூறினார்.

Bigg Boss Tamil Season 9 Sabari Ask Apologies To VJ Parvathy Mother Video Creates Attention On Social
Photo Credit:

காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்: அப்போது சபரி வந்து பார்வதிக்கு பின்னால் நின்று கொண்டு இருந்தார். சபரியைப் பார்த்ததும், " இவனால் தான் அனைத்தும் நடந்தது" என்று கூறினார். உடனே சபரியோ, " அம்மா இந்த பிக்பாஸ் விளையாட்டு முடிந்ததும், மதுரைக்கு வந்து உங்கள் காலில் விழுது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். ஆனால் பார்வதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். சக போட்டியாளராக பார்வதிக்கு இப்படி நடந்து விட்டதை பார்த்து நான் வருத்தப்படுகிறேன்.

ஸ்ட்ராங்கான பொண்ணு: இது விளையாட்டில் தான் நடந்துவிட்டது.அடிபட்டது எப்படி வலிக்கும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன், ஆனால் என்னால் பார்வதியிடம் மன்னிப்பு கேட்க முடியாது. ஆனால் பார்வதி உண்மையிலேயே மிகவும் வலிமையான பெண்" என்று கூறியுள்ளார். அதற்கு பார்வதியோ இவனை நம்பாதே அம்மா என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார். அவர்கள் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X