BB 8: விஜய் சேதுபதி பேச்சுக்கு மதிப்பே இல்லை.. பிக்பாஸ் வீட்டில் ஒரே ரகளை..நல்லவேளை கமல் எஸ்கேப்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக ஃபேமிலி ஆடியன்ஸும் இருக்க முக்கிய காரணமே போட்டியாளர்கள் செய்யும் தவறை, தொகுப்பாளர் சுட்டிக்காட்டும்போது, அவற்றை போட்டியாளர்கள் உணர்ந்து கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்வதுதான். அப்படி இருக்கும்போது, இந்த சீசனில் அதாவது பிக்பாஸ் தமிழ் சீசன் 8இல் இருக்கும் போட்டியாளர்கள், போட்டியின் தொகுப்பாளராக உள்ள விஜய் சேதுபதியின் பேச்சினை துளிகூட கேட்பதில்லை என்பதற்கு வாராவாரம் எதாவது ரகளை வீட்டில் ஏற்பட்டுக் கொண்டே உள்ளது. இது ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. மேலும் தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் பேச்சுக்கே மதிப்பில்லை, இதுதெல்லாம் தெரிந்துதான் கமல்ஹாசன் இந்த சீசனில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

இது ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. மேலும் தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் பேச்சுக்கே மதிப்பில்லை, இதுதெல்லாம் தெரிந்துதான் கமல்ஹாசன் இந்த சீசனில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

bigg boss tamil session8 vijay sethupathi muthukumaran 8

பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் விரும்பிப் பார்ப்பதற்கு இருக்கும் பல காரணங்களில் மிகவும் முக்கியமான காரணம். வாழ்க்கையை எளிதில் புரிந்து கொள்ளலாம் என்பதுதான். கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்ட ஆனந்தி, மேடையில் கூறிய வார்த்தைகள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, " நமக்கு ஒருவர் மீது கோபம் இருக்கும், ஆனாலும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் நாம் அவருக்கான கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்தால், கோபம் நம்மைவிட்டு விலகிவிடும். இதை வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

bigg boss tamil session8 vijay sethupathi muthukumaran 8

ஆனால் எல்லா சீசனும் நல்ல விமர்சனங்களைப் பெறுவதில்லை, எல்லா போட்டியாளர்களும் மக்களால் அங்கீகரிக்கப்படுவதில்லை. அதேநேரத்தில் இந்த சீசனைப் போல் மிகவும் மோசமான அதேநேரத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரின் பேச்சினை கொஞ்சம் கூட மதிக்காத போட்டியாளர்களைக் கொண்ட சீசனாக இந்த சீசன் போட்டியாளர்கள் இருக்கின்றார்கள் என பேசிக்கொள்ளும் அளவிற்கு, இந்த சீசன் போட்டியாளர்களின் நடவடிக்கை உள்ளது.

bigg boss tamil session8 vijay sethupathi muthukumaran 8

அடிதடி: அதாவது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்ட டாஸ்க்கில் போட்டியாளர்கள் ரானவ் மற்றும் ரியான் மோதிக்கொண்டார்கள். இவர்களின் சண்டை வாக்குவாதமாக மட்டும் இல்லாமல், அடிதடியாகவும் மாறியது. உடனே அங்கிருந்த போட்டியாளர்கள் இணைந்து சண்டையைப் பிரித்துவிட்டனர். இதனால் பெரும் அடிதடிச் சண்டை தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக வீக் எண்டில் முதலில் பேச மறுத்த விஜய் சேதுபதி, அதன் பின்னர் லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டார். இதனால் இருவரும் மன்னிப்புக் கேட்டார்கள்.

bigg boss tamil session8 vijay sethupathi muthukumaran 8

மரியாதைக் குறைவு: அதன் பின்னர், கடந்த வாரத்தில், போட்டியாளர்கள் ஜாக்குலின் மற்றும் தர்ஷிகாவுக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டது. இதில் தர்ஷிகா இது ஒன்னும் உங்க அப்பா வீடு இல்லை எனக் கூறினார். அதேபோல், ஜாக்குலினும் மரியாதைக்குறைவாக பேசினார். இவர்கள் சண்டைக்கு மத்தியில், ஜாக்குலினுக்கு ஆதரவாக சௌந்தர்யாவும் தர்ஷிகாவை அட்டாக்கிங் செய்யத் தொடங்கினார். உடனே போட்டியாளர்கள் சண்டையை பிரித்துவிட்டனர். இது குறித்து விஜய் சேதுபதி பேசும்போது, கடந்த வாரத்தில் நான் ரானவ் மற்றும் ரயானுக்குச் சொன்னது, அவர்களுக்கு மட்டும் இல்லை, வீட்டில் உள்ள அனைவருக்குமானதுதான். எனவே கன்னியத்தோடு விளையாடுவதென்றால் விளையாடுங்கள், இல்லை என்றால் மெயின் டோரைத் திறக்கத் சொல்கின்றேன் வெளியே வந்துவிடுங்கள்" எனக் கூறினார்.

bigg boss tamil session8 vijay sethupathi muthukumaran 8

ரகளை: இப்படியான நிலையில், இன்றைய அதாவது டிசம்பர் 10ஆம் தேதி ப்ரோமோக்களில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை நடைபெறுவது தெரிகின்றது. ஆனால் இரண்டாவது ப்ரோமோவில் அருண் முத்துக்குமரனைப் பார்த்து கோபத்தில் ஒருமையில் 'போ' எனக் கூறுவதும், இதனால் முத்துக்குமரன் ஏன் இப்படி பேசுகின்றீர்கள் எனக் கேட்டதற்கும் கத்திக்கொண்டும் ஒருமையில் பேசிக்கொண்டும் இருந்தார் அருண்.

இதனால் கோபமடைந்தை முத்துக்குமரன், 'ஆமாம் டா' என ஒருமையில் பேசினார். இதனால் போட்டியாளர்களுக்கு இடையே பதற்றமே ஏற்பட்டுவிட்டது. மேலும் ஒரு பெரிய ரகளையே ஏற்பட்டுவிட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள், யாருமே விஜய் சேதுபதியின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்ததாலோ என்னவோ, கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X