கோல்மால் செய்து கேப்டனான மது.. இதுல சேரனுக்கு சந்தோசம் வேற.. குறும்படம் போட்டு நெட்டிசன்ஸ் நக்கல்!

கேப்டன் பதவிக்கான போட்டியில் மதுமிதா ஏமாற்றி விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த கேப்டன்சி டாஸ்கில் மதுமிதா வெற்றி பெற்றது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த வார கேப்டன் பதவிக்கான போட்டி நேற்று நடைபெற்றது. மதுமிதா, ஷெரீன், தர்ஷன் ஆகிய மூன்று பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

இந்த டாஸ்க்கில் மூன்று பேரும் கண்களை கட்டிக்கொண்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நிறத்தில், ஆங்கிலத்தில் கேப்டன் (CAPTAIN) என்ற வார்த்தையை சரியாக பொறுத்த வேண்டும். அதாவது கூடையில் கிடக்கும் தனித்தனி எழுத்துகளை சரியாக எடுத்து, போர்டில் பொருத்த வேண்டும்.

கேப்டன் டாஸ்க்

கேப்டன் டாஸ்க்

இந்த டாஸ்கில் ஆரம்பத்தில் இருந்தே மது சிறப்பாக விளையாடினார். ஷெரினும், தர்ஷனும் கொஞ்சம் தடுமாறினர். மதுவுக்கு ஆதரவாக சேரன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். அதுபோல் மற்ற ஹவுஸ்மேட்சும் காட்டு கத்தல் கத்தினர்.

சிறப்பாக விளையாடிய மது

சிறப்பாக விளையாடிய மது

சிறப்பாக விளையாடிய மது போட்டியில் வெற்றி பெற்று கேப்டனாக தேர்வானார். சேரன் சொன்னதை காதில் வாங்கி விளையாடியதால் தான் வெற்றி பெற்றதாக மது கூறினார். மது கேப்டன் ஆனதில் அதிக மகிழ்ச்சி அடைந்தது சேரன் தான். தானே கேப்டன் ஆனது போல் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

 ஓரக்கண்ணால் பார்த்தாரா?

ஓரக்கண்ணால் பார்த்தாரா?

இந்நிலையில் மதுமிதா கண்களை சரியாக கட்டாமல் ஓரக்கண்ணால் பார்த்து ஏமாற்றி விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நிறைய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கோல்மால் பண்ணித்தான் மது கேப்டன் ஆனதாக அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சந்தேக கேள்விகள்

அந்த வீடியோக்களில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் என்னவென்றால், பாக்ஸில் இருந்து வெளியே விழுந்த 'P' என்ற எழுத்தை மது எப்படி சரியாக எடுத்தார்?, அதேபோல் புளூ நிறத்தில் இருந்த 'C' எழுத்தை தவறுதலாக தர்ஷன் எடுக்க, அதை மதுமிதா எப்படி சரியாக பிடுங்கினார் என்பதும் நெட்டிசன்களின் கேள்வி.

சிறப்பான விளையாட்டு

மேலும், எந்த தங்குதடையும் இல்லாமல், கயிறை பிடிக்காமல் மதுமிதா இந்த விளையாட்டை விளையாடியதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. மற்றவர்கள் எல்லாம் தட்டுத்தடுமாறி தங்களது இடத்திற்கு சென்றனர். எழுத்துக்களையும் தடவி தடவியே அவர்கள் பொருத்தினர். ஆனால், மது அப்படி செய்யவில்லை.

சேரன் சொன்னது கேட்டதா?

கடைசி எழுத்தான 'T' என்ற எழுத்தை எடுத்து போர்டில் அவர் மிகச்சரியாக வைத்ததும் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. எல்லோரும் காட்டு கத்தலாக கத்திக்கொண்டிருந்த போது சேரன் கூறியது எப்படி மதுவின் காதில் சரியாக விழுந்தது என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் முன்வைத்துள்ளனர். ஆக, மதுமிதா கண்கட்டிவித்தை காட்டியிருக்கிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

உள்ளடி வேலை

உள்ளடி வேலை

பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க புனையப்பட்டது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்நிலையில் வீட்டில் மதுமிதாவுடன், சாண்டி அண்ட் கோவிற்கு ஏற்கனவே பிரச்சினை நடந்து வருகிறது. இந்த வார எவிக்ஷன் லிஸ்டில் மதுமிதாவின் பெயர் உள்ளது. இதை எல்லாம் தொடர்புப்படுத்தி பார்க்கும் போது, நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட ஏதாவது உள்ளடி வேலை நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X