“சேத்துகுள்ள சின்னபொண்ணு தத்தி தத்தி சிக்கிக்கிச்சு”.. ஓவியாவை ஞாபகப்படுத்தும் ஷெரீன்.. செம க்யூட்!

பள்ளிக்கூடம் டாஸ்க்கில் ஷெரீன் ஓவியாவை ஞாபகப் படுத்துகிறார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 :Day 59 : Over acting செய்யும் Vanitha

சென்னை: பள்ளிக்கூடம் டாஸ்க்கில் ஷெரீன் அழகாக வாக்கியம் ஒன்றைச் சொல்வது, முதல் சீசன் ஓவியாவை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ஆசிரியையாகவும், சேரன் தலைமை ஆசிரியராகவும் இருக்க, மற்ற போட்டியாளர்கள் மாணவர்களாக உள்ளனர்.

முதல்நாளான நேற்றே ஆசிரியை கஸ்தூரிக்கும், மாணவி வனிதாவுக்கும் மோதல் ஏற்பட்டது. டாஸ்க்கைத் தாண்டியும் அந்த சண்டை நீடித்தது.

சேரனுக்கு புரொமோசன்

சேரனுக்கு புரொமோசன்

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் மீண்டும் அந்த டாஸ்க் தான் காட்டப்படுகிறது. நேற்று வேறு பள்ளிக்கூடம், இன்று வேறு போல. தலைமையாசிரியர் பாவம் நேற்று பியூன் போல, ஒரு ஓரமாக சேர் போட்டு அமர்ந்திருந்தார். இன்று அவருக்கு டேபிள் எல்லாம் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

பெரிய வகுப்பு

பெரிய வகுப்பு

அதே போல், மாணவ, மாணவிகளின் சீருடையும் மாற்றப்பட்டுள்ளது. டேபிள் சேரும் மாற்றப் பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது, நேற்று கிண்டர் கார்டன் வகுப்பு எடுக்கப்பட்டது. இன்று கொஞ்சம் பெரிய வகுப்பு போல.

ஓவியா ஞாபகம்

ஓவியா ஞாபகம்

இன்றைய டாஸ்க்கில் ஷெரீன் அழகாக தனக்குத் தெரிந்த தமிழில், ‘"சேத்துகுள்ள சின்னபொண்ணு தத்தி தத்தி சிக்கிக்குச்சு" எனச் சொல்கிறார். அவர் சொல்வதைப் பார்க்கும் போது, முதல் சீசனின் ‘கொக்கு நெட்ட.. கொக்கு நெட்ட..' என ஓவியா பாடியது ஞாபகத்திற்கு வருகிறது.

வனிதா

வனிதா

ஏற்கனவே செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, தனது அழகுத்தமிழில் தனக்கு கொடுக்கப்பட்ட ‘குரங்குகள்' வாக்கியத்தை சொல்கிறார். வழக்கம் போல, சாண்டி தனது ஸ்டைலில் பாடுகிறார். வனிதா டென்சன் ஆகி சொல்ல வேண்டியதை மறந்து நிற்கிறார். இன்னமும் கிண்டர் கார்டனில் இருந்து வெளியில் வரவில்லை போலும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X